5 நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

 

5 நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 5 நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

5 முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து தமிழகத்தில் திறம்பட ஆட்சிப் புரிந்தவர் கலைஞர் கருணாநிதி. 50 ஆண்டுகாலம் திமுக தலைவராக இருந்து மக்களுக்காக அவர் செய்த பணிகள் எண்ணிலடங்கா. வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய கருணாநிதி இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்தும் ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வழிவகைச் செய்தார்.

5 நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த கருணாநிதி, தமிழ் இலக்கியம் செழிக்கவும் தமிழ் வளர்ச்சி அடையவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத் தவிர, 75 ஆண்டுகளாக முரசொலி பத்திரிக்கையை நடத்தினார். இப்படி, பன்முகத் தன்மைக் கொண்ட கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது இளைய மகன் ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 10 ஆண்டுகாலமாக கோட்டைவிட்ட ஆட்சியையும் கைப்பற்றிவிட்டார். இதைப் பார்க்க கலைஞர் கருணாநிதி இல்லையே என்பது மட்டும் தான் அவருக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.

5 நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

எனினும் கருணாநிதியின் பிறந்த தினமான இன்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவெடுத்த முதல்வர் ஸ்டாலின், கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி, அர்ச்சகர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிதியுதவி, ரேஷன் அட்டைகளுக்கு 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகள் உள்ளிட்ட 5 நலத்திட்ட உதவிகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்தார். கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, மாவட்டந்தோறும் ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.