ஓட்டு பணம் தாருங்கள்…சாலை மறியல் செய்த 5 பேர் கைது!!

 

ஓட்டு பணம் தாருங்கள்…சாலை மறியல் செய்த 5 பேர் கைது!!

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆள போவது யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் மக்கள் தங்கள் வாக்கை செலுத்தவுள்ளார்கள். இதன் காரணமாக மக்கள் செல்வாக்கை எப்படியேனும் பிடித்து விட வேண்டும் என அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டன. நேற்றுடன் தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில், பணப்பட்டுவாடாவும் ஒருபக்கம் வேகம் வேகமாக நடந்து வருகிறது. கட்சிக்கு ஏற்றவாறு நோட்டு கொடுத்து மக்களை வளைக்க அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இருப்பினும் மக்கள் தங்கள் வாக்கினை ஜனநாயக முறையில் செலுத்த வேண்டும் என்பதற்காக பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதில், பல இடங்களில் பணப்பட்டுவாடா செய்ய வைத்துள்ள பணமும், பொருட்களும் தேர்தல் பறக்கும் படையினரிடம் அகப்பட்டு வருகிறது.

ஓட்டு பணம் தாருங்கள்…சாலை மறியல் செய்த 5 பேர் கைது!!

இந்நிலையில் ராசிபுரம் தொகுதி பட்டணம் கிராமத்தில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று 20ற்கும் மேற்பட்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ராசிபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முனைந்தனர். போலீசாரை கண்டதும், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர். இருப்பினும் போலீசார் அவர்களில் 5 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களின் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓட்டு பணம் தாருங்கள்…சாலை மறியல் செய்த 5 பேர் கைது!!

சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ஒரு பக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஓட்டுக்கு பணம் தரவில்லை என்று சிலர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்பதை வாக்காளர்கள் மறக்கும் நிலைக்கு அவர்கள் உள்ளார்கள் என்பது தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது கசப்பான உண்மை