5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து : தமிழக அரசுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா

 

5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து : தமிழக அரசுக்கு நன்றி கூறிய நடிகர் சூர்யா

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைப் பள்ளிக்கல்வித் துறை செய்தது.

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, பின்னர் மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைப் பள்ளிக்கல்வித் துறை செய்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

 

இதையடுத்து நேற்று  5, 8ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன.  அதனால் அதை அரசு கவனமுடன் பரிசீலித்து இந்த அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிலையில்  5, 8ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்ததற்கு நடிகர் சூர்யா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “படிக்கும் வயதில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் கல்வி ஓட்டத்தில் இணைப்பது  எத்தனை கடினமானது என்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது.மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்குப் பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்”  என்று குறிப்பிட்டுள்ளார்.