5 இடங்களில் 5 வழிகளில் நாளை விவசாயிகளின் டிராக்டர் பேரணி

 

5 இடங்களில்  5 வழிகளில் நாளை  விவசாயிகளின்  டிராக்டர் பேரணி

5 இடங்களில் இருந்து 5 வழிகளில் நாளை விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற இருக்கிறது.

5 இடங்களில்  5 வழிகளில் நாளை  விவசாயிகளின்  டிராக்டர் பேரணி

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசுக்கும் விவசாயிகளூக்கும் இடையில் இதுவரைக்கும் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தையுமே தோல்வியில் முடிவிந்துவிட்டது.

இதையடுத்து, நாளை குடியரசுதினத்தன்று டெல்லியில் 2 விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டர் பேரணி நடைபெற இருக்கிறது. இதனால் டெல்லி முமுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

5 இடங்களில்  5 வழிகளில் நாளை  விவசாயிகளின்  டிராக்டர் பேரணி

பேரணிக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிராக்டர் பேரணி டிக்ரி, சிங்கு, காஜிப்பூர் வழியாக டெல்லுக்குள் நுழையும் என்றும், சிங்குவிலிருந்து கன் ஜாவாலா. அவுசாண்டி, பவானா, கே.எம்.பி. எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் சிங்குவை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் டிக்ரி எல்லையில் தொடங்கும் பேரணி நாக்லோ, நஜாப்கர், மேற்கு எல்லைப்பகுதி எக்ஸ்பிரஸ் வே வழியாக மீண்டும் டிக்ரியை அடையும் என்றும், காஜிப்பூர் எல்லையில் பேரணிபுறப்பட்டு குண்ட்லி, காஜியாபாத், பல்வால் எக்ஸ்பிரஎஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.