5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி – ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும்!

5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி – ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும்!

5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து இன்று தமிழகம் வருகிறது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி – ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும்!

இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், “5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து இன்று தமிழகம் வருகிறது. விமானம் மூலம் புனேயில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் தடுப்பூசிகள் சென்னை வருகிறது. சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

5.56 லட்சம் கொரோனா தடுப்பூசி – ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும்!

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு 5.36 லட்சமும் , பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் 20 ஆயிரமும் கொண்டுவரப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும். ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி போடப்படும். கோவிஷீல்டு, கோவாக்சினை யார் யாருக்கு போடுவது என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை. தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.