”அக்டோபரில் ஏற்றுமதி 5.4 % வீழ்ச்சி” – இறக்குமதி 11.56 % சரிவு”

 

”அக்டோபரில் ஏற்றுமதி 5.4 % வீழ்ச்சி” – இறக்குமதி 11.56 % சரிவு”

கடந்த அக்டோபரில் நாட்டின் ஏற்றுமதி 5.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ; கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் நாட்டின் ஏற்றுமதி 2623 கோடி டாலர் என்றளவில் இருந்த நிலையில், கடந்த அக்டோபரில் அது 2482 கோடி டாலர் என்றளவில் குறைந்துள்ளது.

”அக்டோபரில் ஏற்றுமதி 5.4 % வீழ்ச்சி” – இறக்குமதி 11.56 % சரிவு”

இது ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் 5.4 சதவீத வீழ்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் பொருட்கள், நகை, ரத்தினகற்கள், மற்றும் தோல் பொருட்களின் ஏற்றுமதி குறைவே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஏப்ரல் – அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் ஏற்றுமதி, 15,007 கோடி டாலர் என்றளவில் 19.05 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதும் தெரியவந்துள்ளது

”அக்டோபரில் ஏற்றுமதி 5.4 % வீழ்ச்சி” – இறக்குமதி 11.56 % சரிவு”

இது ஒருபுறமிருக்க நாட்டின் இறக்குமதி அக்டோபரில் வீழ்ச்சியை சந்தித்து ஆறுதல் அளித்துள்ளது. அக்டோபரில் 3360 கோடி டாலர் என்றளவிற்கு நாட்டின் இறக்குமதி 11.56 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் வணிக பற்றாக்குறை கடந்த அக்டோபரில் 878 கோடி டாலராக குறைந்துள்ளது. இது கடந்த அக்டோபரில் 1176 கோடி டாலர் என்றளவில் இருந்தது. அதன்படி பார்த்தால் 25.34 சதவீதம் அளவுக்கு நாட்டின் வணிக பற்றாக்குறை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.முத்துக்குமார்