5-வது டெஸ்ட் போட்டி: வெற்றி இலக்கை துரத்துவதில் இந்திய அணி திணறல் – 58 ரன்களுக்கு 3 விக்கெட்!

 

5-வது டெஸ்ட் போட்டி: வெற்றி இலக்கை துரத்துவதில் இந்திய அணி திணறல் – 58 ரன்களுக்கு 3 விக்கெட்!

லண்டன்: 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ள 464 ரன்களை சேஸ் செய்வதில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 5-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 331 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 292 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

 

இதைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகள் மூன்றே ஓவர்களில் சரிந்தன. அதன்படி தவான் ரன்னிலும், விராட் கோலி மற்றும் புஜாரா இருவரும் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகினர். லோகேஷ் ராகுல் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 46 ரன்களுடனும், ரஹானே 10 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.

4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான இன்று மிச்சமுள்ள இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும் என்ற சூழல் உருவாகியுள்ளது.