5 வகுப்புகளுக்கும் ஒரே க்ளாஸ் ரூம்! அரசு பள்ளிகளின் அவலம்!

 

5 வகுப்புகளுக்கும் ஒரே க்ளாஸ் ரூம்! அரசு பள்ளிகளின் அவலம்!

அரசு பள்ளிகளில் படித்து வளர்ந்த மாணவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்திருக்கிறார்கள். எண்ணற்ற மருத்துவர்களும், நீதிபதிகளும், தொழிலதிபர்களும், விஞ்ஞானிகளும் அரசு பள்ளிகளில் படித்து உருவானவர்களே. சுதந்திர இந்தியா என்றும், விண்ணில் ஏவுகணைகளையும், அதிநவீன சொகுசு ரயில்களையும் மேம்பாலங்களையும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டு அமைத்துக் கொள்கிறோம்.

அரசு பள்ளிகளில் படித்து வளர்ந்த மாணவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்திருக்கிறார்கள். எண்ணற்ற மருத்துவர்களும், நீதிபதிகளும், தொழிலதிபர்களும், விஞ்ஞானிகளும் அரசு பள்ளிகளில் படித்து உருவானவர்களே. சுதந்திர இந்தியா என்றும், விண்ணில் ஏவுகணைகளையும், அதிநவீன சொகுசு ரயில்களையும் மேம்பாலங்களையும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டு அமைத்துக் கொள்கிறோம். ஆனால், நம் நாட்டில் நாளைய தலைவர்களையும், மேதைகளையும் உருவாக்கும் பள்ளிகளின் அவல நிலையைப் போக்குவதற்கு எந்த அரசாங்கமும் முன்வருவதில்லை. அப்படியே சீரிய திட்டங்களை அரசு வகுத்துக் கொடுத்தாலும், அதிகாரிகள் அதைச் செயல்படுத்துவதில்லை. 

school

மத்திய பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் ஒரே வகுப்பறையில் வைத்து பாடம் நடத்தப்படுகின்ற கொடுமை நிகழ்ந்து வருகிறது.  மத்திய பிரதேச மாநிலம், போபால் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் இருக்கும் அந்த ஆரம்ப பள்ளியில் ஒரே வகுப்பறையில், 5 வகுப்புகளின் மாணவர்களும் அமர்ந்து பாடம் படித்து வருகிறார்கள். பள்ளியில் மின்சாரம், தண்ணீர் என்று எந்த வசதிகளுமே கிடையாது. ஒரேயொரு மாணவனுக்காக ஒரு பள்ளியில் தலைமையாசிரியரும், ஆசிரியரும் பணியாற்றும் இதே நாட்டில் தான் இன்னொரு மூலையில் இருக்க இடம் இல்லாமல் ஐந்து வகுப்பு மாணவர்களையும் ஒரே அறையில் அடைத்து வைத்து பாடம் நடத்தும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது.