5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு கஷ்டம்தான்… ஆனாலும் சாத்தியமற்றது அல்ல….. நிதின் கட்கரி தகவல்

 

5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு கஷ்டம்தான்… ஆனாலும் சாத்தியமற்றது அல்ல….. நிதின் கட்கரி தகவல்

5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை அடைவது கடினமானதுதான் ஆனாலும் அது சாத்தியமற்றது அல்ல என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்தூர் நிர்வாகத்தின் 29வது சர்வதேச மேலாண்மை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: வலுவான அரசியல் விருப்பம் எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு முக்கியம். விருப்பமே அதனை வெளிப்படுத்துகிறது, நாட்டை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலமாக மாற்றுவதற்காக இலக்கை நமக்குள் பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.

பிரதமர் மோடி

இந்த இலக்கை எட்டுவது கடினமானது ஆனால் சாத்தியமற்றது அல்ல. நம் நாட்டில் ஏராளமான வளங்கள் மற்றும் உற்பத்தி திறன் உள்ளது. ஆனால் நாம் ஆண்டு தோறும், மருந்துகள், மருத்துவ கருவிகள், நிலக்கரி, காப்பர் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதிக்காக பல கோடி செலவிடுகிறோம்.

5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் இலக்கு

நமக்கு 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் வேண்டும் என்றால், இது போன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் நாம் அதிவேகம் கண்டு வரும் நாடாக நாம் உள்ளோம். ஆனால் வணிகத்தில் ஒரு சுழற்சி உள்ளது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் சில நேரங்களில் தேவை மற்றும் சப்ளைக்கு இடையிலான இடைவெளி காரணமாக சில சவால்கள் வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.