5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்: மோடி புகழாரம்

 

5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்: மோடி புகழாரம்

5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லி: 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் பிரதமராக கடந்த 2014-ம் ஆண்டு பதவியேற்ற மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று அவர் உரையாற்றுகையில், மருத்துவர் ஜெயச்சந்திரன் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருந்தார். இதேபோல 15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த கர்நாடக பெண் நரசம்மாவும் ஏழைகளுக்கு சேவை புரிந்துள்ளார்.

உலகின் உயரமான சர்தார்படேல் சிலையானது இந்தியாவின் ஒற்றுமைக்கான ஆதாரமும் நமது பண்டிகைகள் கலாசாரத்தையும், விவசாயத்தையும் சார்ந்திருக்கும் மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பண்டிகைகளில் எடுக்கப்படும் புகைப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் புகைப்படங்களை பகிர்வதால் இந்தியாவின் கலாச்சாரம், பன்முகத்தன்மையை அனைவரும் காணமுடியும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்றார்.