5 ரூபாயில் சொகுசு பயணம்!  தமிழகத்தில் அறிமுகமாகும் ‘மைக்ரோ மொபிலிட்டி’! 

 

5 ரூபாயில் சொகுசு பயணம்!  தமிழகத்தில் அறிமுகமாகும் ‘மைக்ரோ மொபிலிட்டி’! 

காலையில் பள்ளி, கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ அரை மணி நேரத்திற்கு முன்பாக பரபரப்பாக கிளம்பினாலும்,  வாகன நெரிசலினால் எப்படியும் தினந்தோறும் லேட்டாகி விடுகிறது. ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால், ஐந்து இரு சக்கர வாகனங்களையும், மூன்று கார்களையும் வைத்திருக்கிறார்கள். அதிலும், சென்னை மாநகரின் காலை நேரத்து போக்குவரத்து நெரிசலை எல்லாம் சொல்லி மாளாது…

காலையில் பள்ளி, கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ அரை மணி நேரத்திற்கு முன்பாக பரபரப்பாக கிளம்பினாலும்,  வாகன நெரிசலினால் எப்படியும் தினந்தோறும் லேட்டாகி விடுகிறது. ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால், ஐந்து இரு சக்கர வாகனங்களையும், மூன்று கார்களையும் வைத்திருக்கிறார்கள். அதிலும், சென்னை மாநகரின் காலை நேரத்து போக்குவரத்து நெரிசலை எல்லாம் சொல்லி மாளாது… இதற்கெல்லாம் விடிவு காலமாக வந்து வாய்த்த ஷேர் ஆட்டோக்கள், ஏறுகிற பெண்களை பதம் பார்ப்பதற்கென்றே சமயங்களில் சந்தி சிரிக்க வைக்கின்றது. இதற்கெல்லாம் தீர்வாக வந்து விட்டது ‘மைக்ரோ மொபிலிட்டி!

micro mobility

இனி, ஒருத்தர்  மட்டும் சென்று வருகிற அலுவலகத்திற்கு காரை எடுக்கத் தேவையில்லை. ரயில் நிலையத்திலிருந்து இரண்டு, மூன்று கிலோ மீட்டரில் இருக்கிற அலுவலகத்திற்காக ஆட்டோ பிடிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் இருந்தும் 5 கி.மீ தொலைவிற்கு பயணிக்க, இ-ஸ்கூட்டர்கள், இ- பைக்குகள், மிதிவண்டிகள் போன்ற சிறிய வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைக்க இருக்கிறார்கள்.  4 அல்லது 5 பேர் செல்லக் கூடிய காரில் ஒருவர் மட்டும் பயணிக்கும் கொடுமையைத் தவிர்க்கலாம். பெட்ரோல் செலவு மிச்சம். தேவையில்லாமல் வாகனங்களை எடுக்கத் தேவையில்லை. ரயில் நிலையத்தில் இறங்கி, வண்டியை எடுத்துச் சென்று, அருகில் இருக்கும் இன்னொர் பாயிண்டில் நிறுத்தி செல்லலாம். இதற்கான ஆரம்ப கட்டணமாக அரை மணி நேரத்திற்கு 5 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 5 கி.மீ தொலைவுக்கு செல்ல வாடகை மிதிவண்டி சேவை வழங்கப்பட்டு வருகிறது. மொபைல் செயலி மூலமாக க்யூ.ஆர்.கோடு வைத்து வாகனத்தை எடுத்துச் செல்லலாம். எந்த ஒரு ரயில் நிலையத்திலும் ஒப்படைத்து விட்டு மொபைல் செயலி மூலமாகவே பணத்தை செலுத்தலாம். இது போன்று வாடகை பைக் மற்றும் ஆட்டோ வசதியை கொண்டு வர சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.  தமிழகத்தைப் போன்றே கேரளா, பெங்களுருவிலும் ‘மைக்ரோ மொபிலிட்டி’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.