5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல் !

 

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல் !

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். 

பருவமழை வலுப்பெற்றிருக்கும் நிலையில், நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். 

ttn

அதனைத் தொடர்ந்து, தருமபுரி, சேலம், நாமக்கல், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையில் அதிக பட்சமாக நாகையிலும், கடலூரில் 8 செ. மீ மழைப் பதிவாகியுள்ளது என்றும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை 43 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது, இந்த மழை தொடர்ந்தால் நாளை 44 செ.மீ மழைப் பதிவு ஆகிவிடும் என்றும் தெரிவித்தார். மேலும், 5 நாட்கள் கழித்து அதாவது 20 தேதிக்கு மேல் மழை எதிர்பார்க்கலாம் என்றும் புவியரசன் தெரிவித்தார்.