5 மாநில தேர்தலில் பாஜக பின்னடைவு; மூத்த தலைவர்கள் கூட்டத்திற்கு மோடி அழைப்பு

 

5 மாநில தேர்தலில் பாஜக பின்னடைவு; மூத்த தலைவர்கள் கூட்டத்திற்கு மோடி அழைப்பு

5 மாநில தேர்தல்களில் பாஜக பின்னடைவு சந்தித்துள்ளதால் பாஜக மூத்த தலைவர்கள் கூட்டத்திற்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி: 5 மாநில தேர்தல்களில் பாஜக பின்னடைவு சந்தித்துள்ளதால் பாஜக மூத்த தலைவர்கள் கூட்டத்திற்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய நடைபெற்ற தேர்தல் இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் முடிவுகளாக இது எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால் அந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்து இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் 3 மாநிலத்திலும் ஆட்சியை பறிகொடுக்கும் நிலை உருவாகிவிடுமோ என பாஜக தலைவர்களும், தொண்டர்களும் சோகமடைந்துள்ளனர்.

இதனையடுத்து 5 மாநில தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள சூழலில் பாஜக மூத்த தலைவர்கள் கூட்டத்திற்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பின்னடைவிற்கான காரணங்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.