5 மாதங்களுக்கு பிறகு ஜம்மு அண்டு காஷ்மீரில் மீண்டும் மொபைல் சேவை!

 

5 மாதங்களுக்கு பிறகு ஜம்மு அண்டு காஷ்மீரில் மீண்டும் மொபைல் சேவை!

5 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் ஜம்மு அண்டு காஷ்மீரில் மீண்டும் ப்ரீபெய்ட் மொபைல் சேவை தொடங்கியது. இதனால் காஷ்மீர் மக்கள் வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை பயன்படுத்த தொடங்கினர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு அண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக அங்குள்ள அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். லேண்ட் லைன் மற்றும மொபைல் சேவை என அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன.

மொபைல் இணைப்பு

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியவுடன் கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்பட்டன. மேலும் லேண்ட் லைன் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் மொபைல் இணைப்புகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று ப்ரீபெய்ட் சிம் மொபைல் இணைப்புகளை உடனடியாக வழங்குமாறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு ஜம்மு அண்டு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது.

2ஜி டேட்டா சர்வீசஸ்

இதனையடுத்து அங்கு ப்ரீபெய்ட் சிம் மொபைல் இணைப்புகள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை 5 மாதங்களுக்கு பிறகு காஷ்மீர் மக்கள் நேற்று முதல் பயன்படுத்த தொடங்கினர். மேலும் ஜம்முவில் 10 மாவட்டங்களிலும், காஷ்மீர் பகுதியில் குப்ராவார பண்டிபோரா ஆகிய மாவட்டங்களில் 2ஜி மொபைல் டேட்டா சேவைகள் வாயிலாக அனுமதிக்கப்பட்ட தளங்களை பார்வையிட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.