5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. அரசாணை வெளியீடு !

 

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..  அரசாணை வெளியீடு !

கட்டாய தேர்ச்சி முறை சட்டத்திருத்தத்தின் படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

கட்டாய தேர்ச்சி முறை சட்டத்திருத்தத்தின் படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.அதன் படி, இந்த கல்வியாண்டு இறுதியில் 8 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அவர்களது பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டாம் என்று பல தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர். 

ttn

அதனைத்தொடர்ந்து, கடந்த 4 ஆம் தேதி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில், 5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்துக் கடந்த ஆண்டு செப்.13 ஆம் தேதி வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்றும் பழைய நடைமுறையே தொடரும் என்று குறிப்பிட்டு தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.