‘5 மணி காட்சிகள் தகுதியை இழந்துவிட்டது’ – ஆர்.ஜே.பாலாஜியை மறைமுகமாக  விமர்சனம் செய்த விஷ்ணு விஷால்

 

‘5 மணி காட்சிகள் தகுதியை இழந்துவிட்டது’ – ஆர்.ஜே.பாலாஜியை மறைமுகமாக  விமர்சனம் செய்த விஷ்ணு விஷால்

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி படத்துக்காக அதிகாலை 5 மணிக் காட்சி திரையிட அனுமதி கொடுத்துள்ளது தொடர்பாக, விஷ்ணு விஷால் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவருக்கும் மறைமுகமாக  ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது

சென்னை: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி படத்துக்காக அதிகாலை 5 மணிக் காட்சி திரையிட அனுமதி கொடுத்துள்ளது தொடர்பாக, விஷ்ணு விஷால் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவருக்கும் மறைமுகமாக  ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘எல்.கே.ஜி. பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார். ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அரசியலுக்கு வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி’ என்று இப்படத்தின் விளம்பரம் தொடங்கப்பட்டது. மேலும், படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் என அனைத்துமே சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைக் கிண்டல் செய்யும் விதத்தில் இருந்ததால் பல எதிர்பார்ப்பு  எழுந்துள்ளன. அதையடுத்து வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.

தமிழ் சினிமாவில் தற்போது பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே அதிகாலை காட்சிகள் திரையிடப்படும். ஆனால், ‘எல்.கே.ஜி’ படத்துக்கு உள்ள எதிர்பார்ப்பால் சென்னையிலுள்ள ரோகிணி திரையிரங்கம் காலை 5 மணி காட்சியை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் “காலை 5 மணி காட்சி அதன் மதிப்பை இழந்து வருகிறது. தந்திரமாக மாறிவிட்டது” என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.ஜே பாலாஜி, ‘நானும் எல்கேஜி படத்துக்கான காலை 5  மணிக் காட்சி தந்திரம் என்றே நினைத்தேன். பிறகு திரையரங்க உரிமையாளரிடம் நேரடியாகக் கேட்டு உறுதி செய்துகொண்டேன்.எங்களுக்கு யார் பரிந்துரையிலும் இடம் கிடைக்கவில்லை. தகுதியின் அடிப்படையில் (மெரிட் சீட்) இடம் கிடைத்துள்ளது. இப்போது இந்த சிந்தனைக்கு ஓய்வு கொடுங்கள். நன்றாக ஓய்வெடுங்கள்.மற்றவர்கள் உழைப்பை மதியுங்கள், உங்கள் மதிப்பு உங்களுக்குக் கிடைக்கும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

vishnu vishal

பின்னர் தற்போது இதற்கு பதில் தரும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால், ‘உங்களை சுற்றிலும் உள்ளவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். படங்களுக்கு வரும் முன்பு நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், எவ்வாறு நடிகர்களுக்கு மரியாதை அளித்தீர்கள் என உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. 

எல்லோருடைய கடின உழைப்பிற்கும் அதற்கு உண்டான மரியாதையை கொடுங்கள். உங்களுக்கு மட்டுமல்ல. என்னுடைய வெற்றிக்காக மக்களின் உணர்வுகளை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார்