5 நாட்களுக்கு பிறகு செல்போன் , இன்டர்நெட் சேவைகள் …. இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர்

 

5 நாட்களுக்கு பிறகு செல்போன் , இன்டர்நெட் சேவைகள் …. இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர்

5 நாட்களுக்கு பிறகு செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் ஒரளவு வழங்கப்பட்டதால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது

கடந்த திங்கட்கிழமையன்று, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை கொடுத்து வந்த 370, 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. அதற்கு முன்னதாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து செல்போன், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன. 

காஷ்மீர்

கடந்த 5 நாட்களாக அந்த மாநிலத்தில் செல்போன் சேவைகள் மற்றும் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்ட காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, பக்ரீத் பண்டிகையின் போது எந்தவித அசம்பாதவிதங்களையும் மக்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும் என அவர் கூறி இருந்தார்.

இதற்கிடையே கவர்னர் சத்யபால் மாலிக் நேற்று காஷ்மீர் நிலவரத்தை ஆய்வு செய்து, வெள்ளிக்கிழமை தொழுமை மற்றும் பக்ரீத் பண்டிக்கைக்காக கட்டுப்பாடுகளை தளர்த்தப்படும் என்று கூறினார். 

காஷ்மீர்

இதன் தொடர்ச்சியாக, இன்று காஷ்மீரில் ஒரளவு போன் சேவைகள் மற்றும் இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவைகள் ஒரளவு வழங்கப்பட்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. பல ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், பேரணி, ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க மெகபூபா முப்தி,ஓமர் அப்துல்லா உள்ளிட்ட சுமார் 400க்கும் மேற்பட்ட தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.