5 கோடி செக் மோசடி: நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜராக உத்தரவு!

 

5 கோடி செக்  மோசடி: நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில்  ஆஜராக உத்தரவு!

கடந்த 10 ஆம் தேதி  பிரகாஷ் ராஜுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம் ஏப்ரல் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனிடையே  கடந்த 2014ஆம் ஆண்டு தமிழில்  உன் சமையலறையில் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில்  சினேகா,  தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

இந்தப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்த பிரகாஷ் ராஜ் இதை தானே தயாரித்தார்.  தடிகா என்ற பெயரில்  நானா படேகர், ஸ்ரேயா சரன், அலி பாசல், டாப்சி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். 

ttn

இந்நிலையில் திரைப்படத்திற்காக பைனான்சியர்  அக்ஷய் என்பவரிடம் 5 கோடி வாங்கிய பிரகாஷ் ராஜ் அதை திரும்ப கொடுக்க நினைத்து ரூ.5 கோடிக்கான  காசோலையை சம்மந்தப்பட்ட பைனான்சியரிடம்  வழங்கியுள்ளார். ஆனால்  போதிய பணமில்லை என காசோலை பவுன்ஸ்  ஆகியுள்ளது. 

இதுகுறித்து பைனான்சியர் தரப்பில், பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த 10 ஆம் தேதி  பிரகாஷ் ராஜுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம் ஏப்ரல் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 

ttn

முன்னதாக இந்த படம் தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் Essel Vision Productions Limited என்ற நிறுவனத்திடமிருந்து 4.5 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து வாங்கியதாக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .