‘5 ஏக்கர் நிலமும் ராமஜென்ம பூமியில் தான் வேண்டும்’ : சர்ச்சையை கிளப்பும் இஸ்லாமிய அமைப்புகள்!

 

‘5 ஏக்கர் நிலமும் ராமஜென்ம பூமியில் தான் வேண்டும்’ : சர்ச்சையை கிளப்பும் இஸ்லாமிய அமைப்புகள்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி  வரும் ஏப்ரல் மாதம் ராமநவமி முதல் துவங்க உள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும்  2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கை   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்டமாகக்  கடந்த  9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

ayodhya

அதில், அயோத்தி இடம் இந்துக்களே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது.  மேலும் சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் கோவில் கட்டுவதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று  கூறியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கரில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

rammandir

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பையடுத்து கோயில் கட்டும்  பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அமைத்து கொடுத்துள்ள கட்டமைப்பை வைத்தே இந்த கோயில்  உருவாகவுள்ளதாகவும், கோயிலின் உயரம் 128 அடி, அகலம் 140 அடியாகும் என்றும் மொத்தம் 212 கல் தூண்கள் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது  இதில் 106 தூண்கள் தயாராகியுள்ளது என்று சொல்லப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி  வரும் ஏப்ரல் மாதம் ராமநவமி முதல் துவங்க உள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

ayodhya

இந்நிலையில் அயோத்தி வழக்கின் முக்கிய வழக்கறிஞரான இக்பால் அன்சாரி, முஸ்லீம்களுக்கு உச்சநீதிமன்றம் ஒதுக்க சொன்ன, அந்த 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியின் ராமஜென்ம பூமியின் 67 ஏக்கருக்குள்  ஒதுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். சில முஸ்லீம் அமைப்புகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.  மேலும் முஸ்லீம்கள்  தங்களுக்கான மசூதிக்கட்ட நிலம் வாங்க திறன் கொண்டவர்கள். அதற்காக  அரசாங்கத்தை நம்பி இருக்கவில்லை. இருப்பினும் அவர்களின் உணர்வுகளுக்கு சமாதானம் சொல்லும் வகையில், ராமஜென்ம பூமியின் 67 ஏக்கருக்குள், 5 ஏக்கர் நிலத்தை கொடுக்கவேண்டும்.அங்கு கல்லறைகள் மற்றும் தர்காக்கள் உள்ளன. இல்லையென்றால் எங்களுக்கு அந்த 5 ஏக்கர் நிலமும் வேண்டாம்’ என்று கூறியுள்ளனர்.