5 இந்திய வீரர்களின் தியாகத்தை மறக்க முடியாது – பிரதமர் மோடி இரங்கல்

 

5 இந்திய வீரர்களின் தியாகத்தை மறக்க முடியாது – பிரதமர் மோடி இரங்கல்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணம் அடைந்த 5 இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணம் அடைந்த 5 இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் ஹண்ட்வாரா நகரில் ஆயுதப்படைகள் மற்றும் அம்மாநில காவல்துறையினரின் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட ஐந்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் மரியாதை செலுத்தினார். “அவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

வடகாஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாரா பகுதியில் தலைநகரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையின்போது இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகள், இரண்டு ஜவான்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

ஹண்ட்வாராவில் தியாகம் செய்த எங்கள் தைரியமான வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு அஞ்சலி. அவர்களின் வீரம் மற்றும் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தார்கள். நமது குடிமக்களைப் பாதுகாக்க அயராது உழைத்தனர். அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். பாதுகாப்பு நடவடிக்கையின்போது இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.