5 ஆண்டுகளுக்கு முன்பே தொற்று நோய் குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்……

 

5 ஆண்டுகளுக்கு முன்பே தொற்று நோய் குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்……

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் 5 ஆண்டுகளுக்கு முன்பே தொற்று நோயால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

தொற்று நோயான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கபட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸால் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களை தனிமைப்படுத்த தொடங்கி உள்ளன. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பே எதிர்காலத்தில் தொற்று நோய் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் என பில் கேட்ஸ் கணித்தது சரியாகி உள்ளது.

ஏவுகணைகள்

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் 2015ல் தொற்று நோய் தொடர்பாக உலக நாடுகளுக்கு எச்சரிக்கை செய்தார். இது தொடர்பாக பில்கேட்ஸ் வீடியோவில் அப்போது கூறியதாவது: நான் குழந்தையாக இருந்த போது அணுசக்தி யுத்த பேரழிவு குறித்து மிகவும் கவலைப்பட்டேன். இருப்பினும் அதற்கடுத்த பத்தாண்டுகளில் உலகளாவிய பேரழிவு அப்படி இருக்காது.

நுண்ணுயிர்கள்

அடுத்த பத்தாண்டுகளில் பல கோடி மக்களை கொன்று குவிப்பது ஏவுகணைகளாக இருக்காது. அவை நுண்ணுயிரிகளாக இருக்கும். இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் என்னவென்றால் அணுசக்தி எதிர்ப்புகளில் நாம் அதிக முதலீடு செய்கிறோம். அதேசமயம் தொற்று நோயை தடுக்கும் அமைப்பில் குறைவாக முதலீடு செய்கிறோம். அடுத்த தொற்று நோய்க்கு எதிராக நாம் தயாராக இல்லை.

வைரஸ் பரிசோதனை

எபோலாவை மேற்கோள்காட்டி, வேலை செய்யாத ஒரு அமைப்பு இல்லை என்பது பிரச்சினை இல்லை, பிரச்சினை என்னவென்றால் எந்த அமைப்பும் இல்லை என்பதுதான். நாம் அடுத்த தொற்று நோயை எதிர்கொள்வதில தயாராக தவறினால், எபோலைவிட அடுத்த தொற்று நோயால் ஏற்படும் பேரழிவு வியத்தகு அளவில் இருக்கும். இவ்வாறு அதில் எச்சரிக்கை செய்து இருந்தார். கொரோனா வைரஸ் தொற்று இன்று யதார்த்தமாக மாறி உள்ள நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பே தொற்று நோய் எதிராக செயல்பட வேண்டிய அவசியத்தை பில் கேட்ஸ் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.