5 ஆண்டுகளாக தொழிலதிபர் வீட்டில் பணத்தை திருடி வந்த பெண்: கையும் களவுமாக சிக்கியது எப்படி?

 

5 ஆண்டுகளாக தொழிலதிபர் வீட்டில் பணத்தை திருடி வந்த பெண்: கையும் களவுமாக சிக்கியது எப்படி?

கடந்த 5 ஆண்டுகளாகப் பணத்தைத் திருடி வந்த உஷா இதுவரை 19 லட்சத்து 85 ஆயிரம் திருடி இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை : சென்னையில் தொழிலதிபர் வீட்டில் கிட்டத்தட்ட 20 லட்சம் பணத்தை திருடிய  பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  பெரிய வண்ணன். தொழிலதிபரான இவரது வீட்டில் சில ஆண்டுகளாகப் பணம் காணாமல் போயுள்ளது. முதலில் அதை கண்டுகொள்ளாத அவர் நாளாக நாளாக பணத்தின் மதிப்பு அதிகரிக்கவோ சந்தேகம் அடைந்துள்ளார். அவரது வீடு முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் இருந்த நிலையில் படுக்கையறையில் கேமிரா இல்லாததால் அவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

money

இதனால்  யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமிரா ஒன்றை படுக்கையறையில் பொருத்தியுள்ளார். இதன் மூலம் பணத்தை திருடியது யார் என்பது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் வேலை செய்யும் உஷா என்னும் பெண் பீரோவைத் திறந்து சாவி பணத்தை திருடுவது சிசிடிவி காட்சியின்  மூலம் அம்பலமானது.

arrested

இதையடுத்து சிசிடிவி காட்சிகளின்  உதவியுடன் பெரிய வண்ணன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உஷாவை பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாகப் பணத்தைத் திருடி வந்த உஷா இதுவரை 19 லட்சத்து 85 ஆயிரம் திருடி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடமிருந்து  40 சவரன் நகை, சில லட்ச பணக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.