Home சினிமா 5 மில்லியன் பாலோயர்கள்..  பிரபல நடிகை மரணம்.. கொலையா, தற்கொலையா?!

5 மில்லியன் பாலோயர்கள்..  பிரபல நடிகை மரணம்.. கொலையா, தற்கொலையா?!

பிரபலமானவர்களின் மரணம் சில சர்ச்சைகளை விட்டு விட்டே செல்கிறது. பணம், புகழ் என்று எப்போதும் லைம் லைட்டில் வலம் வரும் பிரபலங்கள் பெரும்பாலும் தனிமையிலும், அன்பிற்காக ஏங்கித் தவிப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். மன அழுத்தம், தனிமை போன்றவை அவர்களின் தற்கொலைக்கான பொது காரணங்களாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிரபலமானவர்களின் மரணம் சில சர்ச்சைகளை விட்டு விட்டே செல்கிறது. பணம், புகழ் என்று எப்போதும் லைம் லைட்டில் வலம் வரும் பிரபலங்கள் பெரும்பாலும் தனிமையிலும், அன்பிற்காக ஏங்கித் தவிப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். மன அழுத்தம், தனிமை போன்றவை அவர்களின் தற்கொலைக்கான பொது காரணங்களாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில், கொரியாவின் பிரபல பாப் பாடகியும் நடிகையுமான சுல்லி தன் வீட்டில் இறந்து கிடந்தது பாப் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முதலில் சுல்லியின் மரணத்தை அவரது மேனேஜர் தான் காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக்கிறார். பிரபல பாடகியாகவும், நடிகையாகவும் இருந்தாலும் சுல்லியை வேறொரு விஷயத்திற்காக ரசிகர்கள்  இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரமாக தொடர்ந்து வந்தார்கள். இவரது நோ பிரா புரட்சி காரணமாக இவருக்கு சுமார் 5 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தார்கள். 

sulli

சுல்லியின் இயற்பெயர் ஷோய் ஜின் ரி. இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்த மற்றொரு கொரிய பாப் பாடகியான ஜாங்க்யூனின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ல் இறந்து விட்ட ஜாங்க்யூனின் நினைவுகள் சுல்லியை பெரிதும் வருத்திக் கொண்டிருந்ததாகத் தகவல். சுல்லியின் ‘நோ பிரா’ புரட்சி நாட்களில் அவர் பலமுறை தனது மார்பகங்களை இன்ஸ்டா நேரலையில் காட்டத் தவறவில்லை. 2016 ஆம் ஆண்டில் முதல்முறையாக சுல்லி தனது மேலாடையற்ற திறந்த மார்பகப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றிய போது சமூக ஊடகத்தில் மிகக்கடுமையான விமர்சனத்திற்கும், கண்டனங்களுக்கும் உள்ளானார். எதைப் பற்றியும் துளியும் கவலைப்படாமல், கடந்த மாதம் குடித்து விட்டு மேலாடை இல்லாமல் இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து பழமைவாத நம்பிக்கை கொண்ட தென் கொரியாவில் மேலும் சர்ச்சைகளையும், கண்டனங்களையும் வரவழைத்தார். இந்நிலையில் 25 வயது சுல்லியின் இறப்பை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொரிய போலீசார் இந்த மரணம் கொலையா, தற்கொலையா? எனும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னை டாஸ் வின் – முதலில் பேட்டிங் கொல்கத்தா

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 8 புள்ளிகளோடு ஐபில்...

மருத்துவப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு அரசாணை பிறப்பிப்பு!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும்...

நாளைக்கு கடை லீவு! கட்டி ஏறும் பிரியர்கள் கூட்டம்

ஒரு வாராத்துக்கு சாப்பாடு இல்லேன்னாலும் சமாளிச்சுடுவாங்க போலிருக்குது. ஆனா, ஒரு நாளைக்கு கடை இல்லேன்னா தவிச்சு போயிடுறாங்க மது பிரியர்கள். அவுங்ககிட்ட நாளைக்கு கடை லீவுன்னு சொன்னா என்ன செய்வாங்க....

தேவேந்திர குல வேளாளர் அரசாணை பிறக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ஒரே பெயரில் தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வலியுறுத்தி, தமிழக முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோபி பேருந்து...
Do NOT follow this link or you will be banned from the site!