Home அரசியல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க போராட்டம் அறிவிப்பு !

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க போராட்டம் அறிவிப்பு !

பொது தேர்வு என்றால் என்னவென்றே தெரியாத 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கட்டாய தேர்ச்சி முறை சட்டத்திருத்தத்தின் படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.அதன் படி, இந்த கல்வியாண்டு இறுதியில் 8 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்காகப் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை கட்டாயம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

ttn

5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில், மாணவர்களின் விவரங்களை எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததால் பொதுத் தேர்வு நடத்தப்படுவது உறுதியானது. இதனையடுத்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அவர்களது பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது.

ttn

பொது தேர்வு என்றால் என்னவென்றே தெரியாத 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பா.ஜ.க சார்பில் வரும் 28 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம் : முதல்வர் இரங்கல்!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இருக்கும் கூகூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அம்மாவட்டத்தின் இருவேறு இடங்களில் மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்கியதில், மதுரையை சேர்ந்த வீரர்...

உடலில் படுகாயங்கள்.. சீர்காழி அருகே இளம்பெண் மர்ம மரணம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கும் பெருந்தோட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் கலையழகி(26). இவர் முதுகலை பட்டதாரி. இவரது தாய் தமிழ்செல்வி இன்று காலை, இவரை...

“சன்னி லியோன் புருஷன் மாதிரி ஆகலாம்னுதான் இப்படி செஞ்சேன்” -லக்கிக்கு ஆசைப்பட்டு சிக்கிய நபர் .

நடிகை சன்னி லியோனின் கணவரின் கார் நம்பரை அதிர்ஷ்டத்திற்காக பயன்படுத்திய ஒருவரை போலீசார் கைது செய்தார்கள் சன்னி லியோன் இந்திய...

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து :உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி!

சிவகாசி, சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இருக்கும் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும்...
TopTamilNews