5ஜி எல்லாம் ஓரம்போ…நாங்க 6ஜி நோக்கி போறோம்! – ஜப்பான் நாட்டின் 2030 திட்டம்

 

5ஜி எல்லாம் ஓரம்போ…நாங்க 6ஜி நோக்கி போறோம்! – ஜப்பான் நாட்டின் 2030 திட்டம்

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டில் 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய ஜப்பான் நாடு இப்போதே மும்முரமாக களமிறங்கி விட்டது.

டோக்கியோ: எதிர்வரும் 2030-ஆம் ஆண்டில் 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய ஜப்பான் நாடு இப்போதே மும்முரமாக களமிறங்கி விட்டது.

4ஜி சிக்னல் வாசம் படாத கிராமங்கள் பல இந்தியாவில் இன்னும் உள்ளன. அது தவிர சிறிய நகரங்களுக்கு பக்கத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு பாதி அளவே சிக்னல் கிடைத்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய சியோமி நிறுவனம் அதிக ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டு வாக்கில் 5ஜி தொழில்நுட்பம் சந்தையில் பரவலாக தொடங்கும் என்று டெக் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இவ்வாறு இருக்க…5ஜி தொழில்நுட்பத்தை காட்டிலும் பத்து மடங்கு விரைவான 6ஜி தொழில்நுட்பத்தை 2030-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்வதற்காக ஜப்பான் நாடு இப்போதே மும்முரமாக களமிறங்கி உள்ளது.

6g

இதற்கென்றே பிரத்யேக ஆராய்ச்சி குழுவை ஜப்பானின் மத்திய உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ஆராய்ச்சி குழுவின் தலைமை பொறுப்பை டோக்கியோ பல்கலைக்கழகம் ஏற்றுள்ளது. கொள்கைத் திட்டங்களை வரையறுக்கும் பொருட்டு என்.டி.டி மற்றும் டோஷிபா நிறுவனங்கள் ஆலோசனை உறுப்பினர்களாக இணைந்துள்ளன. 5ஜி தொழில்நுட்பத்திற்கு சுமார் 200 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கிய ஜப்பான், தற்போது 6ஜி தொழில்நுட்பத்திற்காக அதைக் காட்டிலும் 20 மடங்கு நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.