5கி சமையல் கேஸ் சிலிண்டர் உபயோகிப்பவர்கள் 8 சிலிண்டர்களை இலவசமாக பெறலாம்!

 

5கி சமையல் கேஸ் சிலிண்டர் உபயோகிப்பவர்கள் 8 சிலிண்டர்களை இலவசமாக பெறலாம்!

ஐந்து கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உபயோகிப்போர்,  8 சிலிண்டர்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐந்து கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உபயோகிப்போர்,  8 சிலிண்டர்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டில் உள்ள சுமார் 8 கோடி ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் பிரதமரின் திட்டத்தின் கீழ் 3 மாதத்திற்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. பொதுவாக வீடுகளில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற குடும்பங்கள் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இலவச சமையல் எரிவாயு பெறுவதில் குழப்பம் இருந்தது. 

LPG gas

இந்நிலையில், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், 14.2 கிலோ எடை சிலிண்டரை பயன்படுத்துவோர் 3 சிலிண்டர்களையும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரை பயன்படுத்துவோர் 8 சிலிண்டர்களையுட்ம இலவசமாக பெறலாம் என மத்திய எண்ணெய் அமைச்சக செய்தி தொடர்பாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.