சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களிடம்…4 பெண்கள் மீட்பு

 

சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களிடம்…4 பெண்கள் மீட்பு

படித்த பெண்களும் சரி, படிக்காத பெண்களும் சரி, சென்னைக்கு சென்றால் நல்ல வேலை கிடைத்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் சென்னை நோக்கி படை யெடுக்கின்றனர். இப்படி வரும் பெண்களை குறிவைத்து காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.

சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களிடம்…4 பெண்கள் மீட்பு

சென்னைக்கு புதிதாக இருக்கும் பெண்களை அடையாளம் கண்டுகொண்டு, அதுவும் குறிப்பாக வேலை தேடும் பெண்களை அடையாளம் கண்டுகொண்டு, தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை வாங்கித்தருகிறேன் என்று அவர்கள் நம்பும்படியாக பேசி, தங்கள் பக்கம் அவர்களை திருப்புகின்றனர். பின்னர் அப்பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறது அக்கும்பல்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருந்ததை அடுத்து, சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால், தனிப்படை அமைத்து ரகசியமாக கண்காணிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களிடம்…4 பெண்கள் மீட்பு

தனிப்படையின் கண்காணிப்பில், சென்னை பெருங்குடி பஞ்சாயத்து முக்கிய சாலையில் இயங்கி வரும் மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் நடப்பதாகவும், பாலியல் தொழிலில் இளம்பெண்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தனிப்படையினர் அதிரடியாக அந்த மசாஜ் செண்டருக்குள் நுழைந்து விசாரணை நடத்தி, நான்கு பெண்களை மீட்டு அவர்களை காப்பகத்தில் ஒப்பட்டைத்துள்ளனர்.

மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் நடத்திய கேரள மாநிலம் நாட்டுக்கல் ஆதிக்கோடு தாலுக்கா வந்தாளையத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(24) மற்றும் மிசோரம் மாநிலம் கெய்ரா கிராமத்தை சேர்ந்த கேபிரியல்(25) ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து செல்போன், ஸ்வைப்பிங் மிஷின், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் உள்ளிட்வற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.