திருப்பத்தூர்: சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு, கணவர் உட்பட 4 பேர் காயம்

 

திருப்பத்தூர்: சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு, கணவர் உட்பட 4 பேர் காயம்

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது, டிராக்டர் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார், குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விமல். இவர் தனது மனைவி நர்மதா மற்றும் 3 குழந்தைகளுடன் துத்திப்பட்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

திருப்பத்தூர்: சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு, கணவர் உட்பட 4 பேர் காயம்

துத்திப்பட்டு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில், படுகாயம் அடைந்த நர்மதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த விமல் மற்றும் 3 குழந்தைகள் சிகிச்சைக்காக, வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.