Home தமிழகம் ’’தப்புன்னா தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டிக்கொடுப்பேன்’ –கமலின் பிக்பாஸ்-4 புரோமோ பஞ்ச்

’’தப்புன்னா தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டிக்கொடுப்பேன்’ –கமலின் பிக்பாஸ்-4 புரோமோ பஞ்ச்

சொன்னபடி கேளு சொல்லுறது பாஸ் என்று பாடும் கமல்ஹாசன், ’தப்புன்னா தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டிக்கொடுப்பேன் என்று பஞ்ச் டயலாக்கையும் பேசும், ‘பிக்பாஸ்-4’ புரோமோ வெளியாகி இருக்கிறது.

’சொன்னபடி கேளு’ என்ற கமல் பாடிய பாடல் மீண்டும் புதிய வடிவத்தில் அமைத்திருக்கிறது விஜய் டிவி. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸின் கடந்த மூன்று சீசன்களையும்  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.  அதே போல், நான்காவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

நான்காவது சீசனை சூர்யா அல்லது சிம்பு தொகுத்து வழங்குவார்கள் என்று பேசப்பட்டது.  மேலும் பல நடிகர்களும் நான்காவது சீசனை தொகுத்து வழங்கவிருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கப்போவது கடந்த மாத இறுதியில் உறுதியானது.

ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி அன்று வெளியான பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் பேசிய கமல்ஹாசன்,  ஊரடங்கு லாக் டவுனால் வேலை இழந்தவர்களோடு தன்னையும் சேர்த்துக்கொண்டு, இதோ நான் வேலைக்கு வந்துவிட்டேன்.  வேலைக்கு போகலாமா? என்று கேட்டு ரசிகர்களை திருப்திப்படுத்தினார்.

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில், ‘’சொன்னபடி கேளு நீ மக்கர் பண்ணாத’’என்று கமல்ஹாசன் பாடியை பாடலையே புதிய வடிவில், தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கினால் சோம்பேறித்தனம் பெருகிவிட்டதையும், தனிமனித இடைவெளி  இல்லாமல் மக்கள் அலட்சியமாக இருப்பதையும்  செல்லமாக கண்டிக்கும் விதத்தில் அப்பாடல் அமைந்திருக்கிறது. அப்பாடலுக்கு கமல்ஹாசன் போடும் ஆட்டம் அசரவைக்கிறது.

பாடல் முடிந்தவுடனே, பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைந்துவிடுகிறார். அங்கே,  ’’மூணு வருசமா உங்களுக்கு பரிச்சயமான இந்த குரல் இப்போது உங்களுக்கு உள்ளேயே ஒலிக்க ஆரம்பிச்சிருக்குது’’ என்று சொல்லிவிட்டு, ’’தப்புன்னா தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டிக்கொடுப்பேன்’’என்று செம ஸ்டைலாக சொல்கிறார்.

இதுவரை வந்த பிக்பாஸ் புரோமோக்களில் இந்த புரோமோ கலக்கலோ கலக்கல்.  அதனால்தான் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

  • கதிரவன்

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசியலுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… மத்திய அமைச்சர் வேதனை

அரசியல் காரணங்களுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று கட்சியை மத்திய அமைச்சர் ஹா்ஷ் வர்தன் தெரிவித்தார். நாடு முழுவதுமாக அனைத்து...

உத்தர பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?.. 10 லட்சம் பிரியங்கா காந்தி பட காலண்டர் விநியோகம்

2022 உத்தர பிரதேச தேர்தலை மனதில் வைத்து, மக்களை சென்றடையும் நோக்கில், அம்மாநில நகரங்கள் மற்றும் கிராமங்களில் வீடு வீடாக சென்று பிரியங்கா காந்தி பட காலண்டரை விநியோகம் செய்ய...

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் ஐக்கியம்… மம்தாவுக்கு தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தாமரை கட்சி

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அரிந்தம் பட்டாச்சார்யா பா.ஜ.க.வில். இணைந்தார். இது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேற்கு வங்கம் மாநிலம் நாதியா...

சிறையிலுள்ள இளவரசிக்கும் உடல்நலக்குறைவு!

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் நன்னடத்தை விதிகளை மீறிய சசிகலா, தனது...
Do NOT follow this link or you will be banned from the site!