4k டிஸ்பிளே, ஹெச்.டி.ஆர் வசதியுடன் அதிரடியாக களமிறங்கும் சியோமி 4S ஸ்மார்ட் டிவி

 

4k டிஸ்பிளே, ஹெச்.டி.ஆர் வசதியுடன் அதிரடியாக களமிறங்கும் சியோமி 4S ஸ்மார்ட் டிவி

சியோமி 4S ஸ்மார்ட் டிவி வருகிற 23-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது.

டெல்லி: சியோமி 4S ஸ்மார்ட் டிவி வருகிற 23-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது.

சியோமி நிறுவனம் எம்.ஐ 4S மாடல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் அந்நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவி இராஜ்ஜியத்தை 75 இன்ச் எம்.ஐ 4S டிவியுடன் விரிவாக்கியுள்ளது. இந்த புதிய வகை ஸ்மார்ட் டிவியை வரும் நவம்பர் 23-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. கவர்ச்சிகரமான 4k டிஸ்பிளே, மென்மையான வடிவமைப்பு, ஹெச்.டி.ஆர் வசதி என பல சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி, அரோஸ்பேஸ் அலுமினியம் என்னும் கனிமத்தால் செய்யப்பட்டது.

சியோமி நிறுவனத்தின் பிரத்யேக செயலிகளும், வாய்ஸ் சர்ச் ஆப்ஷனும், டிவியை பயன்படுத்தும் முறையும் இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ப்ளூடூத் மற்றும் வைஃபை போன்ற அடிப்படை அம்சங்களையும் கொண்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான சியோமி நிறுவனத்தின் 43-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவு டிவிகள் மார்க்கெட்டில் முன்னிலையில் இருக்கும் நிலையில் அந்த வரிசையில் எம்.ஐ 4S டிவியும் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்திய சந்தைகளில் ரூ.82,100 விலையில் சியோமி மால் மற்றும் எம்.ஐ ஸ்டோர்ஸ் மூலம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாத்தில் வெளியான 43 இன்ச் எம்.ஐ 4s ஸ்மார்ட் டிவி குவாட்-கோர் பிராசஸர், வளைந்த ஸ்கிரின் மற்றும் 8 ஜிபி நினைவகத்துடன் சுமார் ரூ.19,100 விலையில் வெளியானது. அதற்கு முன் வெளியான 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.35,100 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.