எம்.பி,எம்.எல்.ஏக்கள் மீது நிலுவையில் இருக்கும் 4,859 வழக்குகள்: விரைவில் விசாரணை

எம்.பி,எம்.எல்.ஏக்கள் மீது நிலுவையில் இருக்கும் 4,859 வழக்குகள்: விரைவில் விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ” இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர் விஜய் ஹன்சாரி என்பாரை நியமித்து இது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டிருந்தது.

எம்.பி,எம்.எல்.ஏக்கள் மீது நிலுவையில் இருக்கும் 4,859 வழக்குகள்: விரைவில் விசாரணை

வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,” இந்தியா முழுவதும் எம்பி, எம்.எல்.ஏக்கள் மீது மொத்தம் 4,859 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,374 வழக்குகள் உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது. தமிழக எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது மொத்தம் 361 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த உள்ளது.

எம்.பி,எம்.எல்.ஏக்கள் மீது நிலுவையில் இருக்கும் 4,859 வழக்குகள்: விரைவில் விசாரணை

–இர.சுபாஸ் சந்திர போஸ்