48 ஆயிரம் பேர் குணம்- 45 ஆயிரம் பேருக்கு தொற்று : இந்தியாவில் கொரோனா

48 ஆயிரம் பேர் குணம்- 45 ஆயிரம் பேருக்கு தொற்று : இந்தியாவில் கொரோனா

கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக இந்தியாவில் குறைந்து வந்துகொண்டிருந்தது. ஆனால், ஓரிரு நாட்களாக அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டதோ என்ற அச்சத்தைத் தருகிறது. ஏனெனில், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கு கீழ் சென்றது மீண்டும் 40 ஆயிரத்தைக் கடந்து உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேர் நாட்டில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொவிட் மொத்த பாதிப்பில் இது 5 சதவீதமாகும்.

48 ஆயிரம் பேர் குணம்- 45 ஆயிரம் பேருக்கு தொற்று : இந்தியாவில் கொரோனா

தொடர்ந்து 47-வது நாளாக புதிதாக நோயிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை, புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போது நாட்டில் 4,43,303 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 4.95 சதவீதமாகும்.

48 ஆயிரம் பேர் குணம்- 45 ஆயிரம் பேருக்கு தொற்று : இந்தியாவில் கொரோனா

நோயிலிருந்து குணமடைந்தோர் வீதம் இன்று 93.58 சதவீதமாக பதிவாகியுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 83,83,602 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் உயிரிழந்துள்ளனர்.

48 ஆயிரம் பேர் குணம்- 45 ஆயிரம் பேருக்கு தொற்று : இந்தியாவில் கொரோனா

இந்திய அளவில் தினசரி நோயாளிகள் குணமடைந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு ஆறாம் இடத்தில் உள்ளது. புதிய நோயாளிகள் அதிகரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு பத்தாம் இடத்தில் உள்ளது. தினசரி நடக்கும் கொரோனா மரணங்களில் பட்டியலில் தமிழ்நாடு பத்தாம் இடத்தில் உள்ளது.