தெலங்கானா: ஆளுநர் தமிழிசை மாளிகையில் 48 பேருக்கு கொரோனா?

 

தெலங்கானா: ஆளுநர் தமிழிசை மாளிகையில் 48 பேருக்கு கொரோனா?

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் வசிக்கும் ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் பணியாற்றுபவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

தெலங்கானா: ஆளுநர் தமிழிசை மாளிகையில் 48 பேருக்கு கொரோனா?இது குறித்து தமிழிசை சௌந்திரராஜன் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இன்று எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எனக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. நமக்கு கொரோனா வராமல் தடுக்க, நம்மால் மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க கொரோனா பரிசோதனை அவசியம். எனவே, பரிசோதனை செய்துகொள்ளத் தயக்கம் காட்ட வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

http://


தற்போது மற்ற ஊழியர்கள், பாதுகாவலர்களுக்கான பரிசோதனை முடிவுகள் பற்றிய செய்தி வெளியாகி உள்ளது. தெலங்கானா ஆளுநர் மாளிகையில் மொத்தம் 495 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பாதுகாப்புப் பணியில் இருந்த 28 பேருக்கும், ஆளுநர் அலுவலகத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் 10 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது என செய்திகள் கூறுகின்றன.

தெலங்கானா: ஆளுநர் தமிழிசை மாளிகையில் 48 பேருக்கு கொரோனா?நோய்த் தொற்றுள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணியாற்றி வந்த பகுதிகளில் கிருமிநாசினி பயன்படுத்தி தொற்று நீக்கும் பணி நடந்தது என்று கூறப்படுகிறது. மேலும் பலரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.