48 எம்.பி ரியர் கேமரா கொண்ட ‘ரெட்மி நோட் 9 ப்ரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

48 எம்.பி ரியர் கேமரா கொண்ட ‘ரெட்மி நோட் 9 ப்ரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

‘ரெட்மி நோட் 9 ப்ரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

டெல்லி: ‘ரெட்மி நோட் 9 ப்ரோ’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ‘ரெட்மி நோட் 9 ப்ரோ’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.67 இன்ச் டிஸ்பிளே, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், விரல்ரேகை சென்சார், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 அம்சம் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அரோரா ப்ளூ, கிளாசியர் வொயிட் மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் ஆகிய நிறங்களில் ‘ரெட்மி நோட் 9 ப்ரோ’ உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ttn

மேலும் மற்ற சிறப்பம்சங்களாக 48 எம்.பி ரியர் கேமரா செட்டப், 16 எம்.பி செல்பி கேமரா செட்டப், ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசசர், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5020 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாடல் விலை ரூ.12,999 எனவும், 4ஜிபி ரேம் மாடல் விலை ரூ.15,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 25-ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் விற்பனை அமேசான் தளத்தில் தொடங்குகிறது.