48 எம்.பி பிரைமரி கேமரா கொண்ட புதிய ஹானர் வி20 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

 

48 எம்.பி பிரைமரி கேமரா கொண்ட புதிய ஹானர் வி20 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

சீனாவில் ஹானர் வி20 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் ஹானர் வி20 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஹானர் வி20 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஹூவாய் கிரின் 980 பிராசஸர், 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் மாடல்கள், 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 48 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் எல்.இ.டி ஃபிளாஷ், TOF 3D இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி செல்ஃபி கேமர, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய ஹானர் வி20 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரெட் ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் 6 ஜிபி ரேம் வெர்ஷன் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.30,428) என்றும், 8 ஜிபி ரேம் வெர்ஷன் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.35,500) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் மொஷினோ எடிஷன் 8 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.40,560) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.