Home தொழில்நுட்பம் 48 மெகா பிக்சல் ரியர் கேமரா கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

48 மெகா பிக்சல் ரியர் கேமரா கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 7 சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அந்நாட்டில் மூன்று வாரங்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் (10 லட்சம்) அதிகமான யூனிட்கள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேகி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

mi

இந்தியாவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999 முதல் தொடங்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களாக 3 ஜிபி, 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் வகைகள், 32 ஜிபி, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி, 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, யு.எஸ்.பி டைப்-சி, குயிக் சார்ஜ் 4.0, 48 எம்.பி + 5 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, ஏ.ஐ வசதி, 13 எம்.பி. செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் புதிதாக 1,409 பேருக்கு கொரோனா, 9 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 6 கோடியே 28ஆயிரமாக அதிகரித்துள்ளது. 14லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...

மாடனா கொரோனா தடுப்பூசி 100 சதவிகிதம் பலன் – விலை எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 905 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 35...

“ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க மக்கள் முடிவெடுத்து விட்டனர்” – கனிமொழி

ஈரோடு அதிமுக ஆட்சியை பொதுமக்கள் விரும்பவில்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் முடிவெடுத்து உள்ளதாகவும், திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்....

அங்கே பேரப்பிள்ளையும் வந்துட்டார்..இங்கே பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம்… ராமதாசின் ஆதங்கம்

எந்தஒரு நாட்டிலும் அங்கிருக்கும் பெரும்பான்மை சமுதாயம்தான் அதிகாரத்தில் இருக்கும். ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மை சமுதாயமாக வன்னியர் சமுதாயம் இருந்தும், பாமக இன்னமும் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியவில்லை என்று, ட்சியினரிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!