Home சினிமா ’என்னால முடியல’ கதறிய பாலாவும் ரிலாக்ஸ் சுசித்ராவும் – பிக்பாஸ் 47-ம் நாள்

’என்னால முடியல’ கதறிய பாலாவும் ரிலாக்ஸ் சுசித்ராவும் – பிக்பாஸ் 47-ம் நாள்

மணிக்கூண்டு டாஸ்க் முடிந்ததால், இன்றாவது சுவாரஸ்மாக இருக்குமா… என்று எதிர்பார்த்த எப்பிசோட் நேற்றையது. அடுத்த வாரத்திற்கான கேப்டன் தேர்வு டாஸ்க், ஜெயிலுக்கு யாரை அனுப்பவது என்று தேர்வு செய்வதும், அவர்களை வழியனுப்பும் வைபவமும்… அதையொட்டிய சின்னச் சின்னச் சண்டைகளுமாக முந்தைய நாட்களோடு ஒப்பிடுகையில் பரவாயில்லை. ஆனால், சில சண்டைகளை விடவும் அவை அமைதியானது ஆச்சர்யமாக இருந்தது. அதை நாம் கட்டுரையில் பார்ப்போம்.

47-ம் நாள்

துள்ளலிசையை பிக்கியின் தம்பி ஒலிக்க விட, மேக்கப்போடு ஆட வந்தார் ஷிவானி (நிஷா ஏற்கெனவே ஒரு டாஸ்க்கில் இந்த ரகசியத்தைப் போட்டு உடைத்துவிட்டார். காதல் கோட்டை பாண்டு போல இரவு படுக்கும்போது மேக்கப் போட்டுக்கொள்ளும் பழக்கம் ஷிவானிக்கு உண்டாம்) மற்றவர்களும் ஆட உற்சாகமாக ஆரம்பிச்சது அன்றைய நாள்.

ஆனா, முதல் டாஸ்க்கே ஏதாச்சும் பஞ்சாயத்து கிடைக்குமா என சுசியிடம் சீட்டைக் கொடுத்து அனுப்பியிருந்தார் பிக்கி. அதாவது முதலில் பாட்டு பாடணுமாம். அடுத்து டான்ஸ். தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்திருக்கும் நேரத்தில் ‘ரம்மியா… ரம்மியா” என்று பாட ஆரம்பிச்சார் சுசி. ஓ… ரம்யா பாண்டியனை புகழ்ந்து பாடறாரோ… அது ரம்யாவுக்கே முதலில் புரியல… பிறகு டி.ஆர். ரைம்மிங் மாதிரி வார்த்தையைக் கோர்த்து பாடினார். அதுக்குப் பதில் நீங்க பாடின பாட்டுல ஒண்ணு பாடியிருக்கலாம். அடுத்து அனிதாவை அழைத்து டான்ஸ் ஆட வைத்தார்.

பிறகு… வெறென்ன ஜெயிலுக்கு போறது யார்ன்னு செலக்ட் பண்ணுவதுதான். பாலா மீது பிக்கி சாஃப்ட் கார்னராக இருக்கிறார்ன்னு பல பேர் சொன்னதால, அவரே நேரடியா மூணு பேரைச் செலக்ட் பண்ணினார். அதாவது மணிக்கூண்டு டாஸ்க்கில் ஒழுங்க ஆடாத பாலா, சுசி, ரம்யா. இந்தப் பட்டியலைப் படிச்சபோதே தெரிஞ்சிடுச்சு பாலா அண்ட் சுசிதான் என்று. மற்றவர்களும் அப்படியே செலக்ட் செய்ய, ‘மணிக்கூண்டு டாஸ்க் மட்டும் வெச்சுதானு எப்படி முடிவு பண்ணின… போய் பிக்பாஸைக் கேட்டுட்டு வான்னு முரண்டு பண்ணினார் பாலா. அப்பறம் ‘நான் ரொம்ப ஸ்ட்ரிட் ஆபிஸராக்கும்’ என ஆஜித் கறாராக சுசி – பாலாவை ஜெயிலுக்கு அனுப்பினார்.

‘என்னை ஜெயிலுக்கு அனுப்பறதுல எவ்வளவு சந்தோஷம். இந்த கரடிகளுக்கு’னு உள்ளே போனார். மேக்கப் கிட்டோடு உள்ளே நுழைந்தார் சுசி. ’போகுதே… போகுதே… என் ஜீவன் போகுதே’ என மோகன் பட ஹீரோயினாட்டாம் முகமெல்லாம் சோகமாக வழியனுப்பினார் ஷிவானி.

ஷிவானியை சம்யுக்தாவும் ரம்யாவும் ஓட்ட… ‘புள்ளப்பூச்சுக்கெல்லாம் கொடுக்கு முளைக்குது’னு எஸ்கேப்பாயிட்டார். ஷிவானி அடிக்கடி வந்து பாலாவைப் பார்ப்பதும், சுசியை முறைப்பதுமாகவே இருந்தது. ஏன்னா, ஏற்கெனவே பாலா – ஷிவானி  தனியா உட்கார்ந்திருந்தா சுசி போய் பேச்சு கொடுப்பார். அப்பவே சுசி மேல ஷிவானி காண்டாவார். இப்போ கேட்கவா வேணும்.

‘உன் ஆளு என்னைய முறைச்சிட்டே இருக்கா… அப்பறம் பாவம் பார்க்க மாட்டேன்’னு சொன்னதும் பாலா வீம்புக்கு சண்டை வளர்க்க, ஒரே ரணகளம்தான். பிக்பாஸ் வீட்டில் பலரை நொந்துபோகவும், கடுப்பேத்தவும் செய்திருக்கிறார் பாலா. ஆனால், முதன்முறையாக பாலாவைக் கதற விட்ட பெருமை சுசிக்குத்தான் போய்ச் சேரும். ‘என்னால முடியல பிக்பாஸ் என்னைக் காப்பாத்துங்க’என ஓப்பனாகவே கதறிட்டு இருந்தார் பாலா. ஷிவானி துடிதுடிச்சுபோய் என்னாச்சோ… ஏதாச்சோனு பதறிட்டு இருந்தார்.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் பாலா படுத்திருக்க, சுசி விசிறிவிட்டுட்டு பாடிக்கொண்டிருந்ததைப் பார்த்து செம ஷாக். ஷிவானிக்கு மட்டுமல்ல நமக்குமே… அதுவும் ‘உன்னை நானறிவேன்… என்னையன்றி வேறு யாரிறிவார்… கண்ணே கலைமானே…” என அற்புதமான பாடல். சுசி மேடம், நீங்க தினமும் நாலு பாட்டு பாடுங்க அதுபோதும். என்னா குரல் அது. அந்தப் பாட்டைக் கேட்டதுமே உங்க மீதான பிம்பம் மறுபடியும் சரியானதுபோல ஒரு ஃபீலிங். ஆனா, உடனே பேசி உடைச்சிட்டீங்க.

அனிதாவுக்கு கொடுத்த ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் யை வாங்கி, ஷனம்க்கு கொடுத்து புது சண்டையை உருவாக்கினார் சுசி. இதெல்லாம் எங்கிருந்து யோசிப்பீங்க சுசி. ஷனமாலே முடியலன்னு நினைக்க வெச்சிட்டீங்க.

கேப்டன் டாஸ்க்கை அறிவித்தார் பிக்பாஸ். அதாவது கையில் நீண்ட குச்சி இருக்கும் . அதன் முனையில் இவர்கள் படம் போட்ட குட்டி பாக்ஸ் இருக்கும். அது கீழே விழாமல், அங்கும் இங்கும் நடக்கணும்.

முதலில் கீழே விட்டது அர்ச்சனா… வேணும் என்றே விட்டதுபோல இருந்தது. அர்ச்சன்னா டீம் இலக்கு சோம் கேப்டனாவது. அடுத்து சம்யுக்தா, கேபி, சோம் என வரிசையாக கீழே விட இறுதியா நிலைத்து நின்றது ஆரி மற்றும் ரியோ.

ரியோ விட்டு விடுவார் என நினைத்த நேரத்தில் ‘ஹீரோ மாதிரி இருக்கீங்க’னு ரம்யா புகழ உடலை க்ருப்பாக்கி ஜம்முன்னு நின்னார். ஆனால், என்னையெல்லாம் யார் இப்படி புகழ்வா… என ஆரி பரிதாபமாகப் பார்த்தும் எதுவும் நடக்கல. அந்த சோகத்திலோ என்னவோ பாக்ஸைத் தவற விட்டார். ரியோ மீண்டும் கேப்டன். இந்த சீசனில் இரண்டாம் முறையாக கேப்டன் ஏற்கும் முதல் நபர்.

‘எனக்காக ஏன் காத்திட்டு இருக்க…இது எப்படி காட்டப்படும் தெரியுமா?’ என நிஷாவிடம் சத்தம் போட்டுட்டு இருந்தார் ரியோ. ‘நான் ஒண்ணும் சின்ன பிள்ளை இல்லை’னு எனும் விதமாக நிஷா கொடுத்த விளக்கங்கள் ரியோ மண்டைக்குள் போக. அதிக அன்பு ஒருவருக்கு கிடைக்கும் நேரத்தில் அன்பைக் கொடுப்பவரையே காயப்படுத்துவதுதானே உலக வழக்கம். அதையே ரியோவும் செய்தார். அட்வைஸ் பண்ணுவதில் ஆரியின் ஷார்ட் ஃபார்ம்தான் ரியோ. அதை மீண்டும் நிஷா உடான சண்டையில் நிருபித்தார். நிஷாவின் கருத்து என்ன என்பதைக்கூட சொல்ல விட வில்லை.

அடுத்த வாரம் வேலை செய்வதற்கான குரூப் பிரிக்கப்பட்டது. அதில் கிச்சன் அணியில் சுசியும் அனிதாவும் இருந்தார்கள். இப்போதான் சண்டைப் போட்டார்கள். இருவரும் அங்கே போனால் என்ன ஆகுமோ என்ற நினைப்பு நமக்கு வர…. அப்பதானே கண்டண்ட் கிடைக்கும் என பிக்கியின் மைண்ட் வாய்ஸ் சொன்னது.

பிறகு, கார் விளம்பர டாஸ்க் நடந்தது. அதில் ஜோடியாகப் பிரிக்கையில் ரம்யா – சோம் வந்து போட்டோ எடுத்தார்கள். ரம்யா போட்டோ எடுக்க சோம் மாடலாம். என்ன கொடுமை இது? ரம்யா ஆர்மி உறங்குகிறதா? வழக்கம்போல நிஷா – ரியோ ஜோடி. ஆனால், ரியோ அலட்சியமாக போட்டோக்கள் எடுத்ததுபோல இருந்தது. ஆரி – சம்யுக்தா ஜோடி வென்றது.

இரவு சாப்பிட்டு முடித்ததும் பிரியாணி, பரோட்டா, கலக்கி என அனுப்பி வெச்சார் பிக்கி. இதுதானா உங்க டக்கு பிக்கி. சுசி – பாலாவை ஜெயிலிருந்து ரீலிஸ் செய்தார் பிக்கி. என்னாது அதுக்குள்ள வந்துட்டீங்கன்னு சிரித்துகொண்டே ஊசிப்போட்டார் குழந்தை மருத்துவர் ரம்யா.

இந்த வாரம் என்னாச்சுன்னா… இப்ப நான் என்னத்தைச் சொல்றதுனு… தயங்கிட்டே இந்த வார சுருக்கத்தை பின்கதையாக்கினார் பிக்கி. சுபம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம்...

110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்

நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த...

திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, கோயிலின் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது. முருக பெருமானின் ஐந்தாம்...

ஆட்டத்தில் தோல்வி; ஆனால் காதலில் வெற்றி! ஆஸ்திரேலிய பெண்ணின் இதயம் கவர்ந்த இந்தியர்!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. மைதானத்தில் இரு அணிகளும் தீவிரமாக ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால் பார்வையாளர்கள் பகுதியில் வித்தியாசமான சம்பவம் நடந்தது. இந்திய கிரிக்கெட்...
Do NOT follow this link or you will be banned from the site!