திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 47 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா!

 

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 47 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா!

திருப்பூர்

திருப்பூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட தனியார் பனியன் நிறுவனத்தில் 47 பெண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அணைப்புதூரில் உள்ள ஏஜிகே மார்க்கெட்டிங் என்ற பனியன் நிறுவனத்தின் விடுதி மற்றும் விருந்தினர் மாளிகையில் ஊரடங்கை மீறி 140-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தங்க வைத்து, வேலை செய்வதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நிறுவனத்தில் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் 47 பெண் தொழிலாளர்களுக்கு கொரோனா!

இதனையடுத்து, சுகாதாரத் துறையினரை வரவழைத்து தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, 47 பெண் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தொற்றுக்குள்ளானவர்களை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்து, அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.

இதேபோல், பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரின் பேரில் திருப்பூர் மங்கலரோடு பாரபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் திருப்பூர் வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் ஊரடங்கை மீறி நிறுவனங்கள் இயங்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தடையை மீறி செயல்பட்ட 5 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.