எகிறியடிக்கும் கொரோனா… ஒரே நாளில் 47 ஆயிரம் பேர் பாதிப்பு; மூன்றாவது அலை உருவாகிவிட்டதா?

எகிறியடிக்கும் கொரோனா… ஒரே நாளில் 47 ஆயிரம் பேர் பாதிப்பு; மூன்றாவது அலை உருவாகிவிட்டதா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,092 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக அதிகரித்திருக்கிறது. மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் சூழலில் திடீரென பாதிப்பு அதிகரிப்பது சுகாதாரத்துறையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது குறித்து பேசிய ஐசிஎம்ஆரைச் சேர்ந்த மருத்துவர் சமீரன், பாதிப்பு அதிகமாக இல்லாத மாநிலங்களில் தற்போது அதிகரிப்பது மூன்றாவது அலைக்கான தொடக்கமாக இருக்கலாம். மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

எகிறியடிக்கும் கொரோனா… ஒரே நாளில் 47 ஆயிரம் பேர் பாதிப்பு; மூன்றாவது அலை உருவாகிவிட்டதா?

இதற்கு முன்னதாக, இந்தியாவில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மூன்றாம் அலை உச்சத்தை அடையும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போலவே இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

எகிறியடிக்கும் கொரோனா… ஒரே நாளில் 47 ஆயிரம் பேர் பாதிப்பு; மூன்றாவது அலை உருவாகிவிட்டதா?

அதில், ஓரே நாளில் கொரோனாவால் 47,092 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 509 பேர் உயிரிழந்ததாகவும் 35,181 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதாகவும் 3,89,583 பேர் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் சூழலிலும் பாதிப்பு அதிகரிப்பது மூன்றாவது அலை உருவாகிவிட்டதா? என்ற பல கேள்விகளை எழுப்புகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உரிய விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.