47 அடியுள்ள முனியப்ப சாமிக்கு 260 ஆடுகள் வெட்டி விருந்து!

 

47 அடியுள்ள முனியப்ப சாமிக்கு 260 ஆடுகள் வெட்டி விருந்து!

இதற்கு ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நாமக்கல் மாவட்டம் அடுத்த சாணார்பாளையத்தில் உள்ள திருப்பதி முனியப்பசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு 47 அடி உயரமுள்ள முனியப்பசாமி சிலை அமைந்துள்ளது. இதற்கு ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுவது வழக்கம். 

ttn

அந்த வகையில் நேற்று முனியப்ப சாமி திருக்கோயிலில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களாக 260 ஆடுகள் வெட்டப்பட்டு அதில் உணவு சமைத்து திருப்பதி முனியப்பசாமிக்கு படைக்கப்பட்டது. 

ttn

பின்னர் படைக்கப்பட்ட  உணவு அங்குள்ள மக்களுக்கு  அன்னதானமாக வழங்கப்பட்டது. அதேபோல் இன்று  நாட்டுக்கோழி விருந்தும் படைக்கும் நிகழ்ச்சி மற்றும் பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.