’இந்த வாரம் சுவாரஸ்யம் குறைந்த நபர் யார் தெரியுமா?’ பிக்பாஸ் 46-ம் நாள்

அப்பாடா… ஒரு வழியாக ரொம்ப ரொம்ப போரிங்கான மணிக்கூண்டு டாஸ்க் முடிந்த எப்பிசோட் நேற்றையது. கொஞ்சம் ரிலாக்ஸ்… கொஞ்சம் விளையாட்டு… கொஞ்சம் அன்பு… கொஞ்சம் சிரிப்பு… கொஞ்சம் விளம்பர நிகழ்ச்சி… கொஞ்சம்கூட இல்லை சண்டை… என்பதாக ஹவுஸ்மேட்ஸ் ரிலாஸ் செய்யும் எப்பிசோட்டாக அமைந்தது. ஆனால், ரம்யா துணிந்து விமர்சனம் பேசத் தொடங்கிய எப்பிசோட் இது என்பது முக்கியம்.

முந்தைய நாளின் தொடர்ச்சி…

ஆரி அண்ட் கோ டைமிங் டாஸ்க்கில் மூழ்கியிருக்க, மற்றவர்களுக்கு ஸ்லோ டான்ஸ் ஆடும் டாஸ்க் கொடுத்தார் பிக்கி. அது சரி, இந்த டாஸ்க்குக்கு கைக்குட்டை காதல் கடிதம் பாட்டை செலக்ட் பண்ணினது யாருன்னு தெரிஞ்சாகணும். காலையில் பாட்டு போடற தம்பி ஷிப்ட் முடிஞ்சு வூட்டுக்குப் போயிட்டாரா?

ஸ்லோ டான்ஸில் அர்ச்சனாவும் சோம்ஸ் ஒரு பக்கம், ரம்யாவும் சம்யுக்தாவும் இன்னொரு பக்கம் ஆட, பாலாவும் ஷிவானியும் யதேட்சையாக ஜோடி சேர்ந்து ஆடினார்கள்.

இன்னொரு பக்கம் டைமிங் டாஸ்க் தீவிரமாகப் போயிட்டு இருந்துச்சு. பார்ப்பதற்கு போரடிக்கும் டாஸ்க்தான். ஆனா, விளையாடுவது ரொம்பவே கஷ்டம். 3 மணி நேரத்திற்கான நொடிகளை கணக்கிட வேண்டும். அதாவது ஒவ்வொரு முறையும் 10,800 எண்களை எண்ண வேண்டும்.

சுசித்ரா கேமரா பார்த்து என்ன பேசினாங்க பிக்பாஸ். எங்களுக்கு ஒண்ணும் புரியல. உங்களுக்காவது புரிஞ்சுதா.. இப்படித்தான் அடிக்கடி கேமராவைப் பார்த்து பேசறாங்க… இதுவும் டாஸ்க்குல ஒரு பார்ட்டா பிக்பாஸ். அப்படி ஏதாச்சும் இருந்தா முன்னக்கூடியே சொல்லிடுங்க பிக்கி.

விடிந்ததும் மணி கூண்டு டாஸ்க் நிறைவடைந்ததாக பிக்கி சொன்னதும் செம ஹேப்பியானார்கள். அவங்களை விட ஹேப்பி ஆடியன்ஸ்தான் பாஸ். ரொம்ப போரிங் டாஸ்க் பிக்கி. ஒருவேளை இந்த வாரம் சுவாரஸ்யம் குறைந்த நபர் யார் எனக் கேட்டால், இந்த டாஸ்க்கைக் கொடுத்த பிக்கிதான் என்று அடித்துச் சொல்லலாம். அந்தளவுக்கு ஜவ்வு மிட்டாயாக இழுத்தது.

46-ம் நாள்

’வந்தா மகாலெட்சுமி…’ பாடலை ஒலிக்க விட்டார் ஷிப்ட்டுக்கு வந்த தம்பி. லேட்டாகப் படுத்தாலும் எழுந்து ஆடி கடமையை ஆற்றினார் ஷிவானி. வழக்கம் போல உற்சாகமாகவே கேபி,ரம்யா, அனிதா, சம்யுக்தா உள்ளிட்டோர் ஆடினர்.

’நீ ஜெயிலுக்கு போ…’ ‘ நான் ஏன் போகனும் நீ ஜெயிலுக்குப் போ’ என ஷனமும் பாலாவும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா ஊருக்கே தெரியுது. ஆனா, எப்போ ராசியாகிறாங்கன்னு யாருக்கும் தெரியல.

அடுத்து ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியில் சோம் – ஷிவானி, ரம்யா – ரியோ, கேபி – ஆஜித், பாலா – சம்யுக்தா ஜோடிகளாகி விளையாண்டார்கள். வென்றது கேபி – ஆஜித் ஜோடி.

ஆக, மனிக்கூண்டு டாஸ்க் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. குறுகிய கால அடிப்படையில் அர்ச்சனா, சோம், சம்யுக்தா டீம் வென்றது. ஒரு சுற்றில் குறைவான கால அடிப்படிடையில் ரியோ, கேபி டீம் வென்றது. நினைத்தது போலவே பாலா, ரம்யா, சுசி டீம் கட்டக்கடைசியாக வந்தது. அர்ச்சனா, சோம், சம்யுக்தா, ரியோ, கேபி, ஆரி ஆகியோரே அடுத்த வார தலைவருக்கான போட்டியில் கலந்துகொள்ள இருப்பவர்கள். இதில் கேபி, சோம் வென்றால் மட்டுமே புது தலைவர். இல்லாட்டி இரண்டாம் முறையாக ஒருவர் தலைவராக வருவார். அதைக் காண ஆடியன்ஸ் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

முதலில் வந்த அடிப்படையில் அர்ச்சனா டீம்க்கு 1000 என்று ஆரம்பித்து பாலா டீம்க்கு 200 பாயிண்ட்டுகள் கொடுத்தார் பிக்கி. எதற்கா… லக்ஸரி பட்ஜெட்டுக்குத்தான்.

ஆனால், கீழே இருந்து வரிசைப்படுத்தினா நாமதான் ஃபர்ஸ்ட்னு ஒரு விளக்கத்தைச் சொன்னார் பாலா. ‘நீங்க எந்த டாஸ்க்கையும் புரிஞ்சிகிட்டு விளையாட மாட்டீங்களா பாலா’ எனச் சிரித்துகொண்டே கொட்டு வைத்தார் ரம்யா. குழந்தை டாக்டர்தான் போல.

ரம்யாவும் சுசியும் தீவிரமாக ஏன் தோற்றோம் என டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க. சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர் நான்தான் என இப்பவே கையைத் தூக்கினார் சுசி. விடுங்க மேடம்.. பாலா ஜெயிலுக்குப் போற மாதிரி இருந்தா… பிக்கியே அதை கேன்சல் பண்ணிடுவார்.

அர்ச்சனா, நிஷா கோஷ்டி எப்படி நிஷா டீம் தோற்றது என டிஸ்கஸ் செய்தார்கள். கதை பேசிட்டே எண்ணினா எப்படி ஜெயிப்பீங்கன்னு கொட்டு வைத்தார் அர்ச்சனா.

லக்ஸரி பட்ஜெட் பொருள்களை வாங்க உள்ளே போன ஆஜித் கோஷ்டி 25 பாயிண்ட்டுகளுக்கு அதிகம் பொருட்களை தேர்வு செய்ததால் முழுவதும் கட் பண்ணினார் பிக்கி. கல் நெஞ்சம் பிக்கி நீங்க?

நிகழ்ச்சி ஆரம்பிச்சி ஒன்றரை மாசமாகிட்டு… இனிமே பேசலன்னா எப்படினு ரம்யாவே குறை பேச ஆரம்பித்தார். ஆஜித், சம்யுக்தா, ரம்யா உட்கார்ந்து பேசிட்டு இருந்தார்கள். சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர் யார் என்பது பற்றி பேச்சு திரும்பியது.

‘ஷிவானியோட ஒரேவேலை பாலாவை என்டர்டெயின்மென்ட் பண்ணுறது தான் என்று ஆரம்பித்து, குக்கூவாக ஷிவானி கூவினாலும் அது பாலாவுக்குத்தான் தனியாக கூவியது என துணிச்சலாக கமெண்ட் அடித்தார் ரம்யா. சம்யுக்தா பட்டும் படாமலும் பேசினார். அப்ப, இது வேற மாதிரி பாலாவிடம் போகவும் வாய்ப்பிருக்கு. ரம்யாவோடு பாலாவின் முதல் சண்டை என நாம் டைட்டில் வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

அப்போது ‘ஷிவானியைத் துரத்திக்கொண்டு பாலா ஓடி விளையாடியதைப் பார்த்து ரம்யா, ‘அண்ணன் – தங்கச்சி விளையாடுறாங்க’னு சொன்னதுதான் ஹை லைட்டே. பாலாவுக்கு ஆதரவாக புஜம் தூக்கிட்டு இருக்கும் சோஷியல் மீடியா தம்பிகள் இனி ரம்யாவுக்கு எதிராக திரும்பிடுவாங்கன்னு நினைக்கிறேன். இனிமே பாலா ஆதரவு vs ரம்யா ஆர்மி சண்டை நடக்கலாம். இவ்வளவு பில்டப் பண்ணி எழுதியிருக்கேன் பாஸ்… கொஞ்சம் பார்த்து செய்யுங்க… பொசுக்குனு விட்டு கொடுத்திடாதீங்க.

மணிக்கூண்டு டாஸ்க் வைத்துதான் விடிய விடிய வேலை தூங்க விடாம செய்தார் பிக்கி என்றாலும், அடுத்த நாளும் புதுப் புது டாஸ்க் கொடுத்திட்டு இருந்தார்.

வரிசையாக தண்ணீர் நிறைந்த கப்களை வைத்து முதல் கப்பில் பிளாஸ்ட்டிக் பந்து வைத்து அதை ஊதி ஊதியே கடைசி கப்புக்கு அனுப்பனுமாம். அர்ச்சனா அதில் தோற்றார். காதில், கழுத்தில், தோளில் எங்கெங்கோ கயிற்றைக் கட்டி ஒரு மூலையில் ஜெம்ஸ் மிட்டாய் வைத்து அதை சாப்பிட வேண்டுமாம். பாலா வென்று விட்டார். முதலில் கட்டி அணைத்து வாழ்த்தியது ஆரி.. என்ன மிஸ்டர் டெடர் ஆரி. மழையில நமுத்துப் போச்சா?

சிறு இடைவேளை விட்டதும், ரம்யாவிடம் ‘சாக்லெட் கொடுக்க மாட்ட்டியா?’என ஜொள் வழிய கடலைக்கு ட்ரைப் பண்ணிட்டு இருந்தார்.  அர்ச்சனா வந்து மொத்த கதையையும் கட்டு சோத்தைப் போல அவிழ்த்து விட முயல, பிக்கி சரியாக டாஸ்க் பெல் அடிக்க சோம் தப்பினார். அதை வெச்சு பிக்கி பெரிய ப்ளான் பண்ணிட்டு இருக்கார் போல.

ஐஸ் குச்சியை வாயில் வைத்து, அதன்மீது ஐஸ் க்யூப்களை அடுக்க வேண்டும் கேபி தோற்க, டிஸ்யூ பேப்பர்களை பாக்ஸிலிருந்து எடுக்கும் போட்டியில் அனிதா வென்றார்.

ஒருவர் பின் ஒருவர் நின்று இருவருக்கு இடையே பலூன் வைத்து டைனிங் ஹாலைச் சுத்தி வந்தால், ஞானப்பழம்… ஸாரி… ஸாரி.. பரோட்டாவும் கலக்கியும் கிடைக்குமாம். நெம்ப சிரமப்பட்டு குழு வென்றது.

அடுத்த வார தலைவர் போட்டிக்கான டாஸ்க்காவது கொஞ்சம் சுவாரஸ்யமாக வைங்க பிக்கி. இல்லாட்டி இந்த வாரத்தையே காவு கொடுக்க வேண்டியிருக்கும். கமல் பேசறதுக்கு டாப்பிக்கே இருக்காது. சுபம்.