தீபாவளி வசூல் ரூ.465 கோடி! வசூலில் முதலிடம் மதுரை மண்டலம்

 

தீபாவளி வசூல் ரூ.465 கோடி! வசூலில் முதலிடம் மதுரை மண்டலம்

முக்கிய தினங்களில் டாஸ்மாக் வசூல் எகிறித்தான் போகிறது. ஆங்கில புத்தாண்டு தினம்தாம் அதிகம் வசூலிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தீபாவளி, பொங்கள் பண்டிகை தினங்கள் இருக்கின்றன.

இந்த வருட தீபாவளி 465 கோடியே 79 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறது டாஸ்மாக். வெளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களின் வசூல் இது.

தீபாவளி வசூல் ரூ.465 கோடி! வசூலில் முதலிடம் மதுரை மண்டலம்

103 கோடியே 82 லட்சம் ரூபாய் வசூல் செய்து மதுரை மண்டலம்தான் முதலிடத்தில் இருக்கிறது. 95 கோடியே 47 லட்சம் ரூபாய் வசூல் செய்து திருச்சி மண்டலம் 2வது இடத்திலும், 94 கோடியே 36 லட்சம் வசூல் செய்து சென்னை மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

தீபாவளி வசூல் ரூ.465 கோடி! வசூலில் முதலிடம் மதுரை மண்டலம்

87 கோடியே 58 லட்சம் ரூபாய் வசூல் செய்து சேலம் மண்டலம் நான்காவது இடத்திலும், 84 கோடியே 56 லட்சம் ரூபாய் வசூல் செய்து கோவை மண்டலம் ஐந்தாவது இடத்தும் இருக்கிறது.