’463 மில்லியன் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சாத்தியமில்லை’ ஐ.நா

 

’463 மில்லியன் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சாத்தியமில்லை’ ஐ.நா

கொரோனாவின் பாதிப்பு சகல துறைகளில் எதிரொலிக்கிறது. பல நாடுகளில் லாக்டெளன் நடவடிக்கையை இன்னும் அதிகப்படுத்தி வருகின்றன. சில நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமானால் மீண்டும் லாக்டெளனை அமல்படுத்துகின்றன. உதாரணமாக, நியூசிலாந்து.

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அதன்வழியே நோய்ப் பரவல் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே பள்ளி, கல்லூரிகள் முறையாக இயங்க வில்லை என்பதே உண்மை.

’463 மில்லியன் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சாத்தியமில்லை’ ஐ.நா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 43 லட்சத்து  15 ஆயிரத்து 420 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 17 நாட்களுக்குள் 43 லட்சம் அதிகரித்து விட்டது.  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 68 லட்சத்து 84 ஆயிரத்து 031 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 28 ஆயிரத்து 721 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.

’463 மில்லியன் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சாத்தியமில்லை’ ஐ.நா

இந்நிலையில் பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைக்க முடியாது என்பதால், ஆன்லைன் வழிக்கல்வியை அரசுகள் ஊக்குவிக்கின்றன. ஆனால், பெரும்பாலான குழந்தைகள் ஆன்லைன் கல்வியைப் பெறும் நிலையில் இல்லை என்றே ஐநா கூறுகிறது.

சமீபத்தில் யுனிசெப் இயக்குநர் ஹென்றிடோ ஃபோர் ஓர் அறிக்கையை அளித்துள்ளார்.

’463 மில்லியன் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சாத்தியமில்லை’ ஐ.நா

அதில் 463 மில்லியன் குழந்தைகளால் இணைய வழிக் கல்வியைப் பெற வாய்ப்பில்லாத சூழல் நிலவுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. மின்சார வசதி இன்மை, இணைய வசதியின்மை, இரண்டை ஏற்படுத்திக்கொடுக்க முடியாத குடும்ப நிலை என்று பல காரணங்களை அது தெரிவிக்கிறது.

இந்த எண்ணிக்கையில் 147 மில்லியன் குழந்தைகள் தெற்காசியாவில் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்க ஒன்று.

கொரோனாவின் பேரிடர் உண்மையில் குழந்தைகளின் கல்விக்குத்தான் போலிருக்கிறது.