சுக்கு காபி விற்ற ‘குக்கூ’ ஷிவானி – பிக்பாஸ் 45-ம் நாள்

 

சுக்கு காபி விற்ற ‘குக்கூ’ ஷிவானி – பிக்பாஸ் 45-ம் நாள்

குக்கூ டாஸ்க்கள் மாறி மாறி நடந்த எப்பிசோட் நேற்றையது. விடிய விடிய அந்த டாஸ்க் நடந்தாலும் அங்கு இருப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் ஆடியன்ஸ்க்கு அப்படியொன்றும் சுவாரஸ்யமில்லை. ஆனால், சிலரை குக்கூ தோற்றத்தில் எப்படி இருப்பார்கள் என முதன்நாள் நாம் நினைத்த பார்த்ததை காட்சியாகப் பார்க்க முடிந்தது.

முந்தைய நாளின் தொடர்ச்சி

சுக்கு காபி விற்ற ‘குக்கூ’ ஷிவானி – பிக்பாஸ் 45-ம் நாள்

அனிதா அண்ட் டீம் டைம் டாஸ்கைத் தொடர்ந்துகொண்டிருந்தார். இத்தனை மணிக்கு, இவர்கள் எல்லாம் பேயாக வருவார்கள் என விலாவாரியாக ஒரு கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தார் அனிதா. அப்பறம் எப்படி பேய் வரும்போது பயப்படுவார்கள். என்ன பிக்கி… சஸ்பென்ஸ் டாஸ்க்குக்கே ட்ரைலர் ஓட்டினா எப்படி? ஆனாலும் நிஷா, நிஜமாகவே பயந்துபோய் அழும் நிலைக்கு போய்விட்டார். பேய்க்கு மேக்கப் சரியில்லை கமெண்ட் பண்ணினார் ஜித்தன் ரமேஷ். பேயை வெச்சு காமெடி பண்றதுதான் இப்ப ஸ்டைல் போல.

விடிந்து 7 மணியான நிலையில், ‘பாலா மணி 5 ஆயிடுச்சு… ஏந்திரி பாலா.. ஏந்திரி பாலா’னு அஞ்சலி பட க்ளைமேக்ஸ் மாதிரி அனிதா எழுப்பிட்டு இருந்தார். அடுத்த டாஸ்க் டீம் அவரோடது. அப்பறம் சுசி, அடுத்து ரம்யா, நெக்ஸ்ட் நிஷா… இப்படி ஒவ்வொருத்தரா வந்து எழுப்ப… டாக்ஸ்க்ல தோத்தா என்னா இப்ப?னு தூக்கத்தை கண்டினியூ பண்ணிட்டு இருந்தார்.

இந்த முறையும் பாலா டாஸ்க்கை புரிஞ்சுகிட்ட மாதிரி தெரியல. அவர்களுக்கு எனக் கொடுக்கப்படும் மூணு மணிநேரத்தை சரியாக கணக்கிட வேண்டும் என்பதே டாஸ்க். ஆனா, வெயிலைப் பார்த்து மணியைக் கணக்கிட்டு சீக்கிரம் டாஸ்க்கை முடிச்சிட்டாங்க.

45-ம் நாள்

’வாட் அ கருவாடு’ பாட்டை தம்பி ஒலிக்க விட, அரை குறை தூக்கமாக இருந்தவர்கள், ஏற்கெனவே விழித்தவர்கள், டாஸ்க் செய்துகொண்டிருப்பவர்கள் என கலந்து இருந்ததால் டான்ஸ் பர்ஃபாமன்ஸ் சரியில்ல… (ஓஹோ… எல்லாம் சரியாக இருந்துட்டா மட்டும் பர்ஃபாமன்ஸ் நல்லா இருந்திருக்குமான்னு நீங்க கேட்கிறது புரியுது)

சுக்கு காபி விற்ற ‘குக்கூ’ ஷிவானி – பிக்பாஸ் 45-ம் நாள்

மார்னிங் டாஸ்கில் அர்ச்சனா, எல்லோருக்கும் ராசிபலன் சொல்லிட்டு இருந்தார். ஆர்.ஜெ நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியதை சற்றே மாற்றி போட்டு பேசினார். பல டாஸ்க்கில் அர்ச்சனாவை வேலை வாங்கிக்கொண்டிருப்பதால் இதில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தது. சோம்- ரம்யா நட்பை வளர்த்தெடுக்கும் வார்த்தைகளாக அர்ச்சனா டைம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிட்டே இருக்கிறார். ஆனா, ரம்யா நழுவிய மீனாக எஸ்கேப்பாயி விடுகிறார்.

பிக்பாஸ் அவ்வப்போது குட்டி குட்டி டாஸ்க் கொடுத்து சுவாரஸ்யப் படுத்த நினைக்கிறார். அப்படிக் கொடுத்தது ரிவர்ஸில் நடப்பது. ஜித்தன் ரமேஷ் ரிவர்ஸில் நடந்துகொண்டிருந்தபோது நிஷா ஜூஸ் கொடுக்க வந்தார். ம்ஹூம்… ரிவர்ஸில் வந்து கொடு’னு சொன்னதும் ‘உனக்கெல்லாம் ஜூஸ் கொடுக்குறதே பெருசு’னு முகத்தில் ஒரு ரியாக்‌ஷன் காட்டினார் நிஷா. கேபி – ஆஜித் ஜோடியாக ரிவர்ஸில் நடந்தார்கள். அவர்கள் இருவரையும் பார்க்கும்போது சம்மர் லீவுக்கு உறவினர் வீட்டுக்கு வந்த சிறுவர்கள் போல இருக்கிறது.

சுக்கு காபி விற்ற ‘குக்கூ’ ஷிவானி – பிக்பாஸ் 45-ம் நாள்

ரியோ ரிவர்ஸிலேயே வெளியே சென்றார். அப்படியே ரம்யாவும் செல்ல, சோம் அங்கே வந்து அப்படி போகாதே… இப்படி போகாதே என ரிவர்ஸில் அல்ல நேரடியாகவே ஜொள் ஊத்தினார். ’இன்னொரு பக்கம் ரிவர்ஸ்லேயே போய் படுத்துங்கோங்க பாலா’ என ஷிவானி பாலாவுக்கு ’ஹெல்ப்’ பண்ணிக்கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து சுசித்ரா ‘ரொம்ப ஜாலியா இருக்கு பிக்பாஸ்’ என நக்கலடித்துக்கொண்டிருந்தார். ‘ஜித்தன்’ரமேஷ் பின்னாடியே போய் அப்படியே படுத்துடுவார்ன்னு சுசி சொன்னதுபோலவே செஞ்சிட்டார்…

ஷிவானி குக்கூவாக மாறி கூவியதை சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ஓட்டிக்கொண்டிருந்தார்கள். பாலா குக்கூவாக மாறி, கதவோரத்தில் நின்று மட்டுமே கத்திட்டு வந்தார். எந்த டாஸ்க்கையும் முறையாக செய்வதில்லை என்ற உறுதியோடு இருக்கிறார் பாலா. உடல் வலிமை சார்ந்த சில டாஸ்க்குகளில் வெற்றிப் பெற்றதையே சொல்லிக்காட்டி வருதையும் வாடிக்கையாக்கி வருகிறார்.

சுக்கு காபி விற்ற ‘குக்கூ’ ஷிவானி – பிக்பாஸ் 45-ம் நாள்

நேற்றைக்கு மாங்காய் பத்தலை ஸ்நாக்ஸாக அனுப்பியிருந்தார் பிக்கி. அதையும் தம் சிரமேற்று விற்றுக்கொண்டிருந்தார் சோம். கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா பாஸ். இன்னொரு முறை சுக்கு காபி வர, அதை சீண்டவும் ஆள் இல்லை போல. குக்கூ ஷிவானி தேடித் தேடி போய் வித்துட்டு இருந்தார். மறக்காமல் பாலாவுக்குக் கொடுத்தார். அருகில் இருப்பவர்களிடம் வேணுமா எனச் சம்பிரதாயமாகக் கேட்டுச் சென்றார்.

முதலிலேயே சொன்னதுபோல இந்த டாஸ்க் நிஜமாகவே கொடூரமானது. மழை, வெயில் என காலநிலை மாறிக்கொண்டே இருக்கும் இந்த நிலையில் விடிய விடிய டாஸ்க் செய்வது என்பது ரொம்பவே கஷ்டம். அவற்றையெல்லாம் மீறி அழகாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் ஆடியன்ஸ்க்கு அவ்வளவு சுவாரஸ்யம் தரவில்லை. மினி டாஸ்க்குகளும் பெரிதாக கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆரியின் மனைவியும் மகளும் வீடியோவில் வந்து வாழ்த்து சொன்னார்கள். ரியோவின் மனைவியும் மகளும் வாழ்த்து சொல்வதை முழுதாகப் பார்க்கக்கூட ரியோவால் முடியவில்லை. பிக்கி ஒழுங்கா ப்ளான் பண்ணியிருந்தால் ஒரு அழுகாச்சி சீன் ரெடி பண்ணியிருக்கலாம்.

சுக்கு காபி விற்ற ‘குக்கூ’ ஷிவானி – பிக்பாஸ் 45-ம் நாள்

இந்த டைம் டாஸ்க் எப்போ முடியும் எனத் தெரியலையே… இது ஹவுஸ்மேட்ஸ் மைண்ட் வாய்ஸ் மட்டுமல்ல… ஆடியன்ஸ் மைண்ட் வாய்ஸூம்தான். ஏன்னா, முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று என நீண்டுக்கொண்டே போய்ட்டே இருக்கு. விரைவில் ஒரு எண்ட் கார்டு போடுங்க பிக்கி. இல்லாட்டி டிஆர்பியில் பின்னாடி போய்டும்.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.