ஈரோடு: பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ரூ.45-க்கு வெங்காயம் விற்பனை

 

ஈரோடு: பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ரூ.45-க்கு வெங்காயம் விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மானிய விலையில் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யும் திட்டம் இன்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், அதிமுக எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு வெங்காயத்தை விநியோகம் செய்தனர்.

ஈரோடு: பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ரூ.45-க்கு வெங்காயம் விற்பனை

முதற்கட்டமாக ஒரு நபருக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டும்தான் வழங்கப்பட்டு வருவதாகவும், நாளை முதல் உழவர் சந்தையிலும், பின்னர் படிப்படியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் கிலோ ரூ.45-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கதிரவன், தற்போது மாவட்டத்தில் 5 டன் பெரிய வெங்காயம் வரத்து ஆகியுள்ளதாகவும், முதற்கட்டமாக ஒரு நபருக்கு ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்றும், பின்னர் படிப்படியாக அவை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.