ஒரே நாளில் 45 ஆயிரம் பேர் பாதிப்பு; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

 

ஒரே நாளில் 45 ஆயிரம் பேர் பாதிப்பு; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 30 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்திருந்த பாதிப்பு தொடர்ச்சியாக 45 ஆயிரத்துக்கு மேல் பதிவாகிறது. இரண்டாம் அலையின் போது பாதிப்பு குறைவாக இருந்த மாநிலங்களிலேயே தற்போது பாதிப்பு அதிகமாக உள்ளது. இது மூன்றாவது அலைக்கான தொடக்கமாக இருக்கலாம் என ஐசிஎம்ஆரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 45 ஆயிரம் பேர் பாதிப்பு; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 366 பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் 34,791 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 3,99,778 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 67,09,59,968 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 47 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 45 ஆயிரமாக குறைந்துள்ளது. அதே போல, உயிரிழப்புகளும் 366 ஆக குறைந்துள்ளது. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மீண்டும் 4 லட்சத்தை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.