மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் 45 போலீசார் உயிரிழப்பு – உள்துறை அமைச்சர் அறிவிப்பு

 

மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் 45 போலீசார் உயிரிழப்பு – உள்துறை அமைச்சர் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் 45 போலீசார் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இதுவரை 45 போலீசார் உயிரிழந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். இதுவரை மகாராஷ்டிராவில் 3,820 போலீசாருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 2,754 போலீசார் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிரா அரசு 122 கொரோனா நிவாரண முகாம்களை நடத்தி வருகிறது. அங்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 4,138 தொழிலாளர்களுக்கு அடைக்கலம் மற்றும் பிற தேவைகள் வழங்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறையின்படி, மகாராஷ்டிராவில் 1,16,752 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் உள்ளன. இதில் 59,166 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர். அத்துடன் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 5,651 பேர் இறந்துள்ளனர்.