’45 பேர் மரணம்… அதில் 5 குழந்தைகள்’ லிபிய பகுதியில் படகு விபத்து

 

’45 பேர் மரணம்… அதில் 5 குழந்தைகள்’ லிபிய பகுதியில் படகு விபத்து

லிபிய நாட்டு கடற்பகுதியில் புலம்பெயர முயன்ற 45 பேர் படகில் மூழ்கி இறந்தனர்.

ஐநா அறிவித்துள்ள செய்தியில் நம்மை அதிர வைக்கும் பல தகவல்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர நினைத்தவர்கள், படகில் செல்ல முடிவெடுத்தனர்.

சிறிய படகில் சுமார் 100 பேர் சென்றுள்ளனர். இப்படிச் சிறிய படகில் புலம்பெயரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் கேட்காத நிலையில் இவர்களின் பயணம் கொடுரமாக முடிவடைந்திருக்கிறது.

படகு லிபிய கடற்பகுதியான ஜ்வாரா பகுதியில் செல்லும்போது, இன்ஜின் வெடித்து உடைந்திருக்கிறது. அதனால் படகில் இருந்தவர்கள் தவித்திருக்கிறார்கள்.

’45 பேர் மரணம்… அதில் 5 குழந்தைகள்’ லிபிய பகுதியில் படகு விபத்து

அந்தப் போராட்டத்தில் 5 குழந்தைகள் உட்பட 45 பேர் மரணம் அடைந்துவிட்டனர். மீனவர்கள் விரைந்து விபத்துக்குள்ளான படகுக்கு வந்தனர். உயிரோடு இருந்த 37 பேரை பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர்.

தப்பித்தவர்கள் மாலி, சாட், செனல் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவர்கள் கடலோர காவல்படையினரால் பாதுகாக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஐநாவின் அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை அளித்திருந்தும் இம்மாதிரியான விபத்துகள் அடிக்கடி நேர்வது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகும்.