தமிழகத்தில் 45% விவசாயிகள் காரீப் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு பதிவு.. முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் 45% விவசாயிகள் காரீப் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு பதிவு.. முழு விவரம் உள்ளே!

பருவநிலை மாற்றத்தாலும் இயற்கை சீற்றங்களாலும் தமிழகத்தில் விவசாய நிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் இழப்பீட்டில் இருந்து விவசாயிகளில் காக்க பயிர் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு பல இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி ஃபஷல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் பயிர் காப்பீடு வழங்கப்பட்டது. அந்த வகையில், காரீப் பருவ பயிர் காப்பீட்டுக்கு இந்த ஆண்டு 45% விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் 45% விவசாயிகள் காரீப் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு பதிவு.. முழு விவரம் உள்ளே!

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 2,74,177 விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் 3,11,486 ஏக்கர் நிலங்களை பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலுமே 3,66,227 விவசாயிகள் 4,53,198 ஏக்கர் நிலங்களை பதிவு செய்துள்ளனர். இதற்கான முக்கிய காரணம், பல இடங்களில் பெய்து வரும் கனமழையும் வெள்ளம் ஏற்படும் அபாயமும் தான். இதனாலேயே விவசாயிகள் அதிக அளவில் பயிர் காப்பீட்டு தொகைக்காக பதிவு செய்கின்றனர்.

தமிழகத்தில் 45% விவசாயிகள் காரீப் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு பதிவு.. முழு விவரம் உள்ளே!

இது குறித்து பேசிய விவசாயத்துறை செயலாளர் ககன்தீப் சிங், கடந்த ஆண்டு பயிர் காப்பீடு தொகையை சரியான நேரத்தில் பெற்றது விவசாயிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாகவும், கடந்த ஆண்டு மட்டுமே ரூ.8,885 கோடி காப்பீடு தொகை கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 1,10,245 விவசாயிகளும், நாமக்கல்லில் 62,840 விவசாயிகளும், நாகப்பட்டினத்தில் 43,300 விவசாயிகளும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.