“சென்னையில் விற்கப்படும் 45% குடிநீர் தரமற்றவை” ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

 

“சென்னையில் விற்கப்படும் 45% குடிநீர் தரமற்றவை” ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னையில் விற்கப்படும் குடிநீரில் 45% பாதுகாப்பானது அல்ல என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிகம் என்பதாலும், அதிகளவில் தொழிற்சாலைகள் இருப்பதாலும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே இருக்கிறது. இதனால் மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என கேன்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்கப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

“சென்னையில் விற்கப்படும் 45% குடிநீர் தரமற்றவை” ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில் சென்னையில் விற்கப்படும் தண்ணீர் பாக்கெட்டுகள், குடிநீர் கேன்கள் என 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்கு அனுப்பியது. அந்த ஆய்வின் முடிவில், சோதனைக்கு வந்த மாதிரிகளில் 45% மக்கள் குடிக்க பாதுகாப்பானது அல்ல என்ற அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகியுள்ளது. அனுப்பப்பட்ட மாதிரிகளில் 40 மட்டுமே குடிப்பதற்கு ஏதுவானது என்றும் மற்றவைகளில் பாக்டீரியா இருப்பதும், போலி நிறுவனங்களின் பேரில் தயாரிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.

“சென்னையில் விற்கப்படும் 45% குடிநீர் தரமற்றவை” ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த தகவலை சென்னை மாநகராட்சி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் தாக்கல் செய்திருக்கிறது. மாதிரிகளில் இருப்பது போன்ற தரமற்ற நீரை குடிப்பதால் மக்களுக்கு பல நோய்கள் உருவாக வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தடுத்து, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் போலி சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.